• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • மேற்கு வங்க பாஜக எம்.பி லாக்கெட் சாட்டர்ஜி மீது தீங்கு விளைவிக்கும் ரசாயண வண்ணப்பொடி வீச்சு

மேற்கு வங்க பாஜக எம்.பி லாக்கெட் சாட்டர்ஜி மீது தீங்கு விளைவிக்கும் ரசாயண வண்ணப்பொடி வீச்சு

லாக்கெட் சாட்டர்ஜி

லாக்கெட் சாட்டர்ஜி

மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளியில் நேற்று நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவில், 'தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள்' கொண்ட வண்ணப்பொடி தனது முகத்தில் வீசப்பட்டதாக, பாஜக பெண் எம்.பி. லாக்கெட் சாட்டர்ஜி தெரிவித்துள்ளார்.

  • Share this:
    மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளியில் நேற்று நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவில், 'தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள்' கொண்ட வண்ணப்பொடி தனது முகத்தில் வீசப்பட்டதாக, பாஜக பெண் எம்.பி. லாக்கெட் சாட்டர்ஜி தெரிவித்துள்ளார்.

    "இது வெறுப்புணர்வின் உச்சம். ஒரு பொருள் என் மீது வீசப்பட்டது, யார் அதை எறிந்தார்கள் என்று நான் பார்த்தபோது, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பேட்ஜ் அணிந்த 3-4 பேர் அருகில் நிற்பதைக் கண்டேன். அவர்கள் தான் அதைச் செய்திருக்க வேண்டும்" என சாட்டர்ஜி செய்தியாளர்களிடம் அழுதபடி கூறினார்.

    PAN-Aadhaar Linking: பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைக்கவில்லை எனில் ரூ.1000 அபராதம்



    ஒரு கிளிப்பை ட்விட்டரில் மேற்கு வங்க பாஜக பகிர்ந்துள்ளது. அதில் திரிணாமுல் காங்கிரஸின் "குண்டர்களால்" இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டியது. ’வெறுப்பு, வன்முறை மற்றும் துன்புறுத்தல் ஆகியவை விரைவில் முடிவுக்கு வரும். பெண்களை துன்புறுத்தும் இந்த கோழைத்தனமான செயல் தோல்வி பயத்தால் வெளிவந்துள்ளது!’ என மேற்கு வங்க பாஜக தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளது. இது குறித்த விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: