முகப்பு /செய்தி /இந்தியா / நடந்த கதையே வேறு.. அறையில் வன்கொடுமை.. காலேஜ் மாணவி மரணத்தில் வெளியான திடுக் திருப்பம்.. போலீசில் சிக்கிய கல்லூரி முதல்வர்!

நடந்த கதையே வேறு.. அறையில் வன்கொடுமை.. காலேஜ் மாணவி மரணத்தில் வெளியான திடுக் திருப்பம்.. போலீசில் சிக்கிய கல்லூரி முதல்வர்!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

கல்லூரி முதல்வராக இருக்கும் ரமேஷ் அந்த மாணவியை தனது அறைக்கு அழைத்து தொல்லை கொடுத்து வந்துள்ளார் என விசாரணையில் தகவல்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Karnataka, India

கர்நாடகா மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்த 18 வயது இளம் பெண் லிங்கசுகுர் டவுனில் உள்ள தனியார் ஜூனியர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் கல்லூரியின் விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 3-ந்தேதி இரவு விடுதியில் தனது அறையில் மாணவி தூக்கில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக மாணவிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை என வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்துவந்தனர்.

இதற்கிடையே, மாணவியின் குடும்பத்தினர் அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக லிங்கசுகுர் போலீசில் புகார் அளித்தனர். மேலும் மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கையும் போலீசாருக்கு கிடைத்தது. அதில், மாணவி வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து போலீசார் தற்கொலை வழக்கை மாற்றி வன்கொடுமை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

அதாவது, கல்லூரி முதல்வராக இருக்கும் ரமேஷ் தான் அந்த விடுதியின் வார்டனாக இருந்துள்ளார். இதனால் அவர் அடிக்கடி அந்த மாணவியை தனது அறைக்கு அழைத்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.மேலும் மாணவியை அவர் மிரட்டியும் வந்துள்ளார். கல்லூரி முதல்வரின் அத்துமீறல் அதிகரித்ததால் அந்த மாணவி. பி.யூ.சி. 2-ம் ஆண்டை வேறு கல்லூரியில் சேர்ந்து படிக்க முடிவு செய்திருந்தார். இந்தநிலையில்,

சம்பவத்தன்று கல்லூரி முதல்வர் ரமேஷ், அந்த மாணவியை தனது அறைக்கு வரவழைத்து மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. மேலும், இதுபற்றி வெளியே தெரியாமல் இருப்பதற்காக மாணவியை கொலை செய்து உடலை, அவரது அறைக்கு கொண்டு சென்று தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை செய்துகொண்ட தாக நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து கல்லூரி முதல்வர் ரமேசை நேற்று போலீசார் கைது செய்தனர்.


First published:

Tags: Crime News, Karnataka, Man arrested, Sexual abuse