முகப்பு /செய்தி /இந்தியா / காதலனின் விவசாய நிலத்தில் கல்லூரி மாணவி மர்ம மரணம் -கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொலை என பெற்றோர் புகார்

காதலனின் விவசாய நிலத்தில் கல்லூரி மாணவி மர்ம மரணம் -கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொலை என பெற்றோர் புகார்

திருப்பதியில் மாணவி ஒருவர் தன்னுடைய காதலனின் விவசாய நிலத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்த விவகாரத்தை காவல்துறை விசாரித்துவருகிறது.

திருப்பதியில் மாணவி ஒருவர் தன்னுடைய காதலனின் விவசாய நிலத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்த விவகாரத்தை காவல்துறை விசாரித்துவருகிறது.

திருப்பதியில் மாணவி ஒருவர் தன்னுடைய காதலனின் விவசாய நிலத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்த விவகாரத்தை காவல்துறை விசாரித்துவருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

திருப்பதி: ஆந்திர மாநிலம் சத்யசாய் மாவட்டம் கோரண்ட்லா பகுதியை சேர்ந்தவர் தேஜஸ்வினி. திருப்பதியில் தங்கி பிபார்ம் மூன்றாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில், ஆந்திர மாநிலம் சத்யசாய் மாவட்டம் கோரண்ட்லா மண்டலம் மல்லாபள்ளி கிராமத்தில் சாதிக் என்பவரின் குடும்பத்திற்கு சொந்தமான விவசாய நிலத்தில் இருக்கும் அறை ஒன்றில் சந்தேகத்திற்கு இடமான வகையில் தேஜஸ்வினி இறந்து கிடந்தார்.

அதே பகுதியை சேர்ந்த சாதிக் என்பவர் மரணம் அடைந்த மாணவியின் காதலன் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் சாதிக் குடும்பத்திற்கு சொந்தமான விவசாய நிலத்தில் அமைந்துள்ள அறையில் தேஜஸ்வினி உடல் கிடந்தது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் மாணவியின் மரணம் பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். தங்கள் மகளை திருப்பதியில் இருந்து கடத்தி சென்ற சாதிக் அவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துவிட்டார் என்று தேஜஸ்வி பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையும் படிங்க: ரயில் தண்டவாளத்தில் வெடித்த நாட்டு வெடிகுண்டு.. சதி வேலையா? - புதுச்சேரி போலீசார் விசாரணை

எனவே தங்கள் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று அவர்கள் போலீசாரை கேட்டுக் கொண்டனர்.ஆனால் காவல்துறை சந்தேக மரணம் என்று எஃப் ஐ ஆர் இல் குறிப்பிட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மாணவியின் உடலை மருத்துவமனையில் இருந்து பெற்றுக்கொண்ட பெற்றோர், உறவினர்கள் மற்றும் மகளிர் சங்கத்தினர் ஆகியோர் தேஜஸ்வினி உடலுடன் கோரண்ட்லா காவல் நிலைய வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், உடற்கூறு ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று காவல்துறையினர் உறுதி அளித்ததால் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

First published:

Tags: Crime News, Girl Murder