ஃபேக் அக்கவுண்ட் மூலம் நிர்வாண புகைப்படம் வாங்கி மாணவரை மிரட்டி ரூ.7 லட்சம் பறித்த இளைஞர்!

வீட்டில் மாணவரின் பெற்றோர்கள் திருட்டு நடப்பதை அறிந்து யார் எனக் கண்டறிந்ததில் தங்களுடைய பையன் தான் செய்திருக்கிறார் எனத் தெரியவந்துள்ளது.

news18
Updated: April 6, 2019, 7:31 PM IST
ஃபேக் அக்கவுண்ட் மூலம் நிர்வாண புகைப்படம் வாங்கி மாணவரை மிரட்டி ரூ.7 லட்சம் பறித்த இளைஞர்!
இன்ஸ்டாகிராம்
news18
Updated: April 6, 2019, 7:31 PM IST
பெங்களூரைச் சேர்ந்த 21 வயது இளைஞர் கல்லூரி மாணவரின் நிர்வாணப் படத்தைக் காட்டி மிரட்டி 7 லட்சம் பறித்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூர் ராஜாஜி நகர் காவல் நிலையத்தில் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து குற்றவாளியைத் தேடி வருகின்றனர். வழக்குப் பதிவில் எவ்வாறு அந்த சம்பவம் நிகழ்ந்தது என்பதை விவரித்துள்ளனர்.


அதில் 21 வயது இளைஞர் இஸ்டாகிராமில் பெண் புகைப்படம் வைத்துத் தான் ஒரு பெண் என்பது போன்ற பொய்யான கணக்கை உருவாக்கியுள்ளார். பின் 17 வயது கொண்ட அந்தக் கல்லூரி மாணவரிடம் அந்த நபர் தொடர்ந்து மெசேஜ் செய்து பேசியுள்ளார்.


கல்லூரி மாணவரும் அந்த நபர் உண்மையாகவே பெண் தான் என நம்பி குறுஞ்செய்திகள் அனுப்பியுள்ளார். இது நாளடைவில் காதலாக மாற கல்லூரி மாணவர் அவரைக் காதலித்துள்ளார்.
Loading...

படிக்க... ஒரு உள்ளாடையின் விலை 22,000 ரூபாயா? அதில் அப்படி என்ன சிறப்பு
பின் அந்தப் பேச்சு பாலியல் உணர்வைத் துண்டும் விதமாக மாறியுள்ளது. அந்த போலியான நபர் கல்லூரி மாணவரை நிர்வாண நிலையில் புகைப்படம் எடுத்து அனுப்பச் சொல்லியிருக்கிறார். அந்த மாணவரும் அனுப்பியுள்ளார்.


பின் அந்த நபர் மற்றொரு போலி கணக்கை  உருவாக்கி அதன் வழியாகக் கல்லூரி மாணவருக்கு அந்த புகைப்படத்தை அனுப்பி மிரட்டியுள்ளார். அதில் பத்து லட்சம் தர வேண்டும். இல்லையெனில் இந்த புகைப்படத்தை உன் நண்பர்கள் காணுமாறு பகிர்ந்துவிடுவேன் என மிரட்டியுள்ளார்.


படிக்க...  அதிகாலையில் தாம்பத்திய உறவில் ஈடுபடுவதால் இத்தனை நன்மைகளா?
 இதனால் பயந்துபோன அந்த கல்லூரி மாணவரும் என்ன செய்வதெனத் தெரியாமல் அந்த மிரட்டலுக்குப் படிந்து பணம் சேர்க்க ஆரம்பித்திருக்கிறார். அப்படியாக மொத்தம் 6. 4 லட்சம் பணமாகவும் சில தங்க நகைகள், வெள்ளி பொருட்களை வீட்டிலிருந்து திருடி அந்த நபருக்குக் கொடுத்துள்ளார்.


பின் வீட்டில் மாணவரின் பெற்றோர்கள் திருட்டு நடப்பதை அறிந்து யார் எனக் கண்டறிந்ததில் தங்களுடைய பையன் தான் செய்திருக்கிறார் எனத் தெரியவந்துள்ளது.


பின் மகனிடம் விசாரிக்க அவரும் நடந்த விஷயங்களை விளக்கியுள்ளார். பின் உடனே பெற்றோருடன்  ராஜாஜி நகர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு  வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


தற்போது அந்த போலி நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


Also See....தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

ஐ.பி.எல் தகவல்கள்:

POINTS TABLE:


SCHEDULE TIME TABLE:


ORANGE CAP:


PURPLE CAP:


RESULTS TABLE:
First published: April 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...