முகப்பு /செய்தி /இந்தியா / அர்ஷ்தீப் சிங் மீது வெறுப்பு பிரச்சாரம்.. அம்பலமானது பாகிஸ்தானின் சதி திட்டம்!

அர்ஷ்தீப் சிங் மீது வெறுப்பு பிரச்சாரம்.. அம்பலமானது பாகிஸ்தானின் சதி திட்டம்!

அர்ஷ்தீப் சிங்

அர்ஷ்தீப் சிங்

இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் அந்த விக்கிப்பீடியா பக்கம் எங்கிருந்து எடிட் செய்யப்பட்டது என ஆய்வு செய்ய உத்தரவிட்டது. விசாரணையில் அது பாகிஸ்தானில் உள்ள ரவால்பிண்டி என்ற பகுதியில் இருந்து மாற்றப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

அர்ஷ்தீப் சிங்கை காலிஸ்தானி என குறிப்பிட்டு நடைபெறும் வெறுப்பு பிரச்சாரம், ஹிந்துக்களுக்கும் சீக்கியர்களுக்கும் இடையே மத ரீதியான மோதலை ஏற்படுத்த சில பாகிஸ்தான் ட்விட்டர் கணக்குகள் தொடங்கியது என கண்டறியப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையே ஆசிய டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அதில் மேட்சின் முக்கிய தருணத்தில் முக்கியமான ஒரு கேட்சை தவறவிட்டார் இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங்.

இதனையடுத்து, பாகிஸ்தான் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே அவர் அந்த கேட்சை விட்டார் என பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டது. முதலில் அவரது விக்கிப்பீடியா பக்கத்தில், அவர் காலிஸ்தான் ஸ்குவாட்டில் விளையாடியவர் என குறிப்பிட்டு அவரை காலிஸ்தானுடன் தொடர்ப்புப்படுத்தி எடிட் செய்யப்பட்டுள்ளது.

இதனை அடிப்படையாக கொண்டு ட்விட்டரில் பல்வேறு கணக்குகள் அவரை காலிஸ்தானி என குறிப்பிட்டு ட்வீட் செய்தனர். அந்த கணக்குகளை ஆய்வு செய்யும்போது முதன் முதலில் இவ்வாறு அவரை காலிஸ்தானுடன் தொடர்புப்படுத்தி ட்வீட் செய்த கணக்குகள் அனைத்தும் பாகிஸ்தான் பின்புலம் கொண்டவை என தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து, இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் அந்த விக்கிப்பீடியா பக்கம் எங்கிருந்து எடிட் செய்யப்பட்டது என ஆய்வு செய்ய உத்தரவிட்டது. விசாரணையில் அது பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டி என்ற பகுதியில் இருந்து மாற்றப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

இதையும் வாசிக்க: ரோஹித் சர்மா செய்த இமாலயத் தவறுகள், அர்ஷ்தீப் சிங் விட்ட கேட்ச், கோலியின் கடைசி ’டாட்’பால்கள்- இந்திய அணியின் தோல்விக்கு காரணம் இவைதான்

இந்த நிகழ்வும், 2021 அக்டோபர் மாதம், முகமது ஷமி மீது நிகழ்த்தப்பட்டதும் ஒரே போன்ற சமூகவலைதள தாக்குதல் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ‘காலிஸ்தான்’ என்ற சொல் அதிக பயன்படுத்தப்பட்ட பகுதி எது என கூகுள் ட்ரெண்ட்ஸில் தேடி பார்க்கும்போது, அது இந்தியாவை விட அதிகம் பாகிஸ்தானில் தான் தேடப்பட்டது என உறுதி செய்யப்பட்டது.

Image

பாகிஸ்தானை சேர்ந்த சில ட்விட்டர் கணக்குகளில் வெறுப்பு பிரச்சாரத்திற்கு மீண்டும் ஒரு கிரிக்கெட் வீரர் பலியாகியிருக்கிறார்.

First published:

Tags: Asia cup cricket, India vs Pakistan, Indian cricket team