கேரள தங்கக் கடத்தல் விவகாரம் - ஸ்வப்னா சுரேஷ் மீது அடுத்தடுத்து வழக்குகள்

News 18

கேரள தங்கக் கடத்தல் விவகாரம் தொடர்பாக ஸ்வப்னா சுரேஷ் மீது அன்னிய செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  அமீரகத்தில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு, 15 கோடி ரூபாய் மதிப்பு தங்கம் கடத்தி வரப்பட்டதை தொடர்ந்து, கேரள அரசில் பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ் உள்பட 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

  என்.ஐ.ஏ., அமலாக்கத்துறை மற்றும் சுங்கத்துறை அமைப்புகள் இணைந்து இந்த விசாரணையை மேற்கொண்டு வருகின்றன. இதனிடையே சுங்கத் துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஸ்வப்னாவுக்கு அண்மையில் ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் அன்னிய செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் தடுப்பு வழக்கு அவர் மீது பதியப்பட்டுள்ளது.  Also read... மத்திய அரசுக்கு ₹ 2,400 கோடியை செலுத்தாமல் உள்ள விமான சேவை நிறுவனங்கள்

  இது தொடர்பாக அவரை கைது செய்ய சுங்கத்துறை பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது. இச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டால், விசாரணையின்றி ஓராண்டு வரை அவரை தடுப்புக்காவலில் வைக்கமுடியும்.
  Published by:Vinothini Aandisamy
  First published: