• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • கொச்சி தேவசம் போர்டில் பிராமணர் அல்லாத 54 பேர் அர்ச்சகர்களாக தேர்வு!

கொச்சி தேவசம் போர்டில் பிராமணர் அல்லாத 54 பேர் அர்ச்சகர்களாக தேர்வு!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

கேரளாவின் திருவாங்கூர் தேவசம் போர்டில் கடந்தாண்டு 36 பிராமணர் அல்லாதோர் அட்சர்கர்களாக நியமிக்கப்பட்டனர். அதேபோல, தற்போது கொச்சி தேவசம் போர்டுக்கும் பிராமணர் அல்லாதவர்கள் அட்சகர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கேரள மாநிலம் கொச்சி தேவசம் போர்டில் உள்ள கோவில்களில் அர்ச்சர்களாகப் பணியாற்ற முதன் முறையாக பிராமணர் அல்லாத 54 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், 7 பேர் பட்டியலின பிரிவைச் சேர்ந்தவர்களாவர்.

கேரள மாநிலத்தில் உள்ள திருவாங்கூர் தேவசம் போர்டு கடந்தாண்டு 36 பிராமணர் அல்லாதவர்களை அர்ச்சர்கர்களாக நியமித்தது. கேரள அரசின் இந்த நடவடிக்கை பெரும் வரவேற்பு பெற்றது. இதேபோல, கொச்சி தேவசம் போர்டின் கீழ் உள்ள கோவில்களில் பணியாற்ற மொத்தம் 70 பேர் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் மூலம் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு வைத்து தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

70 பேரில் 54 பேர் பிராமணர் அல்லாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 54 பேரில் 7 பேர் பட்டியலின பிரிவைச் சேர்ந்தவர்கள். வரலாற்றில் முதன் முறையாக கொச்சி தேவசம் போர்டு பிராமணர் அல்லாதவர்களை அட்சகர்களாக நியமிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

கேரள மாநில சுற்றுலா மற்றும் தேவசம் போர்டு துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், “மீண்டும் நாங்கள் வரலாற்றை மாற்றி எழுதியுள்ளோம். 7 பட்டியலின பிரிவைச் சேர்ந்தவர்கள் உள்பட 54 பிராமணர் அல்லாதவர்கள் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட உள்ளனர்” என ட்வீட் செய்துள்ளார்.



மேலும் செய்திகள்..

மனைவி விரதம் இருக்காததால் விரக்தியில் கணவன் தூக்குப்போட்டு தற்கொலை!

’சர்கார் அரசியல்’: கதை திருட்டு குறித்து வாய் திறந்த வசனகர்த்தா ஜெயமோகன்!

Also see..

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankar
First published: