மின்சாரத் தேவை அதிகரித்து வருவதாலும், நாட்டில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்படு வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாலும் கோடை காலங்களில் மின்தடைகள் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
நிலக்கரி:
இந்தியாவில் நிலக்கரி மிகவும் முக்கியமான படிம வகை எரிபொருளாக உள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த மின்சார உற்பத்தியில், அனல்மின் சக்தியின் பங்கு 75% ஆக உள்ளது. கடந்த 4 பத்தாண்டுகளாக இந்தியாவின் முதன்மையான எரிசக்தி நுகர்வு 700 சதவீதமாக அதிகரித்துள்ளது. எரிசக்தி ஆதாரத்தைத் தாண்டி உருக்கு, இரும்பு. சிமெண்ட், காகிதம், செங்கல் சூளைகள் போன்ற ஏராளமான தொழில்களிலும் நிலக்கரி முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
கடந்த 9 ஆண்டுகளில் கோடை காலத்துக்கு முந்தைய அளவை தற்போது இருக்கும் பயன்பாட்டு நிலக்கரியின் அளவு குறைவாக உள்ளதாக ரியட்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 38 ஆண்டுகளில் இல்லாத அளவு இந்தாண்டு மின்சாரத் தேவை அதிகரித்து காணப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மஹாராஷ்டிரா தனது சராசரி மின்தேவையை பூர்த்தி செய்ய முடியாத சூழலில் உள்ளது. இங்கே, கட்டாய மின்தடை என்பது தவிர்க்க முடியாதாக உள்ளது. மறுபுறம், ஆந்திரா, கர்நாடகா, ராஜஸ்தான், தெலுங்கானா, ஜார்கண்ட் போன்ற மாநிலங்கள் தொடர்ச்சியாக மின்வெட்டை சந்தித்து வருகின்றன. குஜராத், தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் அதிக விலை கொடுத்து மின்கொள்முதல் செய்து வருகிறது.
உள்நாட்டில் நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் மின்தேவைகளை பூர்த்தி செய்வதற்கான பல்வேறு முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
முன்னதாக, நிலக்கரி அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட அமைப்பால் (Nominated Authority, Ministry of Coal) 106 நிலக்கரி வளாகங்கள் (Captive Coal Blocks ) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில், நிலக்கரி சுரங்க ஏலத்தின் மூலம் 47 பேருக்கு சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த, வளாகங்களில் இருந்து 2021-22-ம் ஆண்டில் 85 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டது.
மேலும், கடந்த 12ம் தேதி இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி அடிப்படையிலான ஆலைகளின் செயல்பாடுகளை மத்திய அமைச்சர் ஆய்வு செய்தார்.
வேகமாக அதிகரித்து வரும் மின் தேவையைக் கருத்தில் கொண்டு, அனைத்து மின் உற்பத்தி நிறுவனங்களும் பத்து சதவிகிதம் வரை நிலக்கரி கலப்பிற்க்காக அதனை இறக்குமதி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டது
மேலும், சில மாநிலங்களில் உள்ள மின் உற்பத்தி நிறுவனங்களின் நீண்ட தூர நிலக்கரிப் போக்குவரத்தைத் தவிர்ப்பதற்காக, இணைப்பு நிலக்கரியில் (linkage coal) 25 சதவிகிதம் வரை சுங்கச்சாவடி வசதி (Toiling Facility) அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
Published by:Salanraj R
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.