• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ஊசியின் விலை ரூ. 16 கோடி... தொழிலாளியின் மகளுக்கான மருத்துவ செலவை ஏற்ற நிறுவனம்

ஊசியின் விலை ரூ. 16 கோடி... தொழிலாளியின் மகளுக்கான மருத்துவ செலவை ஏற்ற நிறுவனம்

நிலக்கரி இந்தியா நிறுவனத்தின் தலைவராக பிரமோத் அகர்வால் என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி உள்ளார். இவர்தான், குழந்தை சிருஷ்தியின் சிகிச்சைக்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டவர்.

  • Share this:
    முதுகெலும்பு தசைநார் சிதைவால் (SMA spinal muscular atrophy) பாதிக்கப்பட்ட தொழிலாளியின் மகளுக்கான மருத்துவச் செலவை, நிலக்கரி இந்தியா நிறுவனம் (Coal India) ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த சிகிச்சைக்காக தேவைப்படும் ஊசியின் விலை ரூ. 16 கோடி, நிலக்கரி இந்தியா நிறுவனம் சார்பில் அளிக்கப்படவுள்ளது.

    இந்திய நிலக்கரி நிறுவனம் (Coal India) மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று. இதன் துணை நிறுவனமான தென்கிழக்கு நிலக்கரி நிறுவனம் (SECL) சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்திற்கு சொந்தமான நிலக்கரி ஒன்றில் மேற்பார்வையாளராக சத்தீஷ்கரை சேர்ந்த சதீஷ் குமார் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 2 வயதில் சிருஷ்தி ராணி என்ற பெண் குழந்தை உள்ளது.



    இந்நிலையில், முதுகெலும்பு தசைநார் சிதைவால் குழந்தை சிருஷ்தி ராணி அவதிப்பட்டு வருகிறார். இவரை குணப்படுத்த வேண்டும் என்றால் ஸோல்ஜென்ஸ்மா (Zolgensma) என்ற ஊசி செலுத்தப்பட வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முன்பு இந்த குழந்தைக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பல கட்ட சிகிச்சைக்கு பின்னர், சிருஷ்தி ராணி தற்போது வென்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளார்.



    ஒரு கூலித் தொழிலாளி மகளின் உயிரைக் காப்பாற்ற ரூ. 16 கோடி தேவை என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் அவரின் நிலைமையை உணர்ந்த நிலக்கரி இந்தியா நிறுவனம், சிகிச்சைக்கான மருந்தை வாங்குவதற்கு தேவைப்படும், ரூ. 16 கோடியை அளிப்பதாக கூறியுள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் கூறுகையில், 'ரூ. 16 கோடி கொடுத்து சதீஷ் குமாரால் ஊசியை வாங்க முடியாது. அந்த செலவை ஏற்பதாக நிலக்கரி இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கை மூலம் மற்ற பொதுத்துறை நிறுவனங்களுக்கும், அமைப்புகளுக்கும் நிலக்கரி இந்தியா முன் மாதிரியாக உள்ளது.
    தொழிலாளர்களுக்கு அவர்களுடைய குடும்பம்தான் உண்மையான சொத்து. அவர்களின் உயிர்களை காப்பாற்றுவதற்கு நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம்'' என்று கூறியுள்ளார்.



    நிலக்கரி இந்தியா நிறுவனத்தின் தலைவராக பிரமோத் அகர்வால் என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி உள்ளார். இவர்தான், குழந்தை சிருஷ்தியின் சிகிச்சைக்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டவர்.

    2019 நவம்பர் 22-ம் தேதி பிறந்த குழந்தை சிருஷ்திக்கு 6 மாதத்தில் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. அப்போது கொரோனா தீவிரமாக இருந்த காரணத்தால் பெற்றோரால் நல்ல சிகிச்சை அளிக்க முடியவில்லை. கடைசியாக 2020 டிசம்பரில் வேலூர் சி.எம்.சி.யில் குழந்தை சேர்க்கப்பட்டபோது, அவருக்கு முதுகெலும்பு தசைநார் சிதைவு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன்பின்னர் சதீஷ் குமார் வேலை பார்க்கும் சத்தீஷ்கருக்கு குழந்தை கொண்டு செல்லப்பட்டபோது, அங்கு உடல்நிலை மேலும் பாதிப்பு அடைந்தது. தற்போது, வீட்டிலேயே வென்டிலேட்டர் உதவியுடன் குழந்தை சிருஷ்தி ராணி சிகிச்சை பெற்று வருகிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Abdul Musthak
    First published: