• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • மின்சார பற்றாக்குறையில் தத்தளிக்கும் மாநிலங்கள்: இந்தியாவின் நிலக்கரி நெருக்கடி

மின்சார பற்றாக்குறையில் தத்தளிக்கும் மாநிலங்கள்: இந்தியாவின் நிலக்கரி நெருக்கடி

கோப்புப் படம்

கோப்புப் படம்

இந்தியாவின் அனல் மின் நிலையங்களில் ஒரு வாரத்துக்கு நிலக்கரி இருக்கும். அவ்வளவுதான். நெருக்கடி அதிகமானால் நிலக்கரியை இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும் இதனால் மின் கட்டணம் உள்ளிட்டவை கடுமையாக உயரும் ஆபத்து உள்ளது.

  • Share this:
    இந்தியாவில் உத்தரப் பிரதேசம் முதல் ராஜஸ்தான், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் மின்சாரப் பற்றாக்குறை பெரிய அளவில் எழ மின்வெட்டுகள் அதிகமாகியுள்ளன. இந்தியாவின் நிலக்கரி உள்ளிட்ட எரியாற்றல் பற்றாக்குறையே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

    இந்தியாவின் மின் உற்பத்தியில் 70% அனல் மின் உற்பத்திதான் பங்களிப்பு செய்கிறது. நிலக்கரி தட்டுப்பாட்டினால் இந்திய ஆற்றல் பரிமாற்ற நிறுவனத்தின் ஸ்பாட் விலைகள் கடந்த 2 வாரங்களில் 3 மடங்குக்கும் மேல் அதிகரித்துள்ளது. திங்களன்று ஒரு மணி நேரத்துக்கான மின் கட்டணம் ஒரு கிலோவாட்டுக்கு ரூ.16.42 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 12 ஆண்டுகளில் இதுதான் அதிகபட்ச விலை!

    ராஜஸ்தான் மாநிலம் பெரிய அளவில் இதனால் பாதிக்கப்பட்டு நகர்ப்புறங்களில் நாளொன்றுக்கு 2 மணி நேர மின் விட்டும், கிராமப்புறங்களில் நாளொன்றுக்கு 4 மணி நேர மின்வெட்டும் செய்யப்பட்டு மக்கள் கடும் அவதியில் உள்ளனர், தொழிற்துறையினர் திண்டாடி வருகின்றனர். இந்திய நிலக்கரி நிறுவனத்திலிருந்து ராஜஸ்தான் அனல் மின் உற்பத்திக்கு கொடுக்கப்படும் நிலக்கரியின் அளவு பாதிக்கும் கீழ் குறைந்தது.

    ராஜஸ்தான் மட்டுமல்ல, பஞ்சாப், ஜார்கண்ட், உ.பி. ஆகிய மாநிலங்களிலும் மின்வெட்டு கன ஜோராக இருந்து வருகிறது. வெள்ளியன்று இந்த நிலக்கரி பற்றாக்குறையினால் மகாராஷ்டிராவின் 11 கிகா வாட் திறன் கொண்ட உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால் இன்னும் மோசமான நிலைக்கு மின்வெட்டு சென்று பொருளாதார வளர்ச்சியைப் பாதித்து சமூக உள்கட்டுமானங்கள் தகரும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

    அதாவது மருத்துவமனைகள், பள்ளிகள் போன்ற சமூக உள்கட்டமைப்புகள் பெரிய அளவில் பாதிக்கப்படும் என்கின்றனர்.
    பவர் கட் செய்யுங்கள் என்று ஊக்குவிக்கப்படுவதால் மின்சாரத்தையே நம்பியிருக்கும் அலுமினியம் உருக்காலை, ஸ்டீல் தொழிற்சாலைகள் ஒன்று உற்பத்தியைக் குறைக்க வேண்டும் இல்லையேல் எரிபொருளுக்கு அதிக விலை கொடுக்க வேண்டும்.

    சனிக்கிழமையன்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மின்வெட்டு ஆபத்து நாட்டை நெருங்கி வருகிறது என்ற தொனியில் முன் கணித்து ட்வீட் செய்துள்ளார். டெல்லி நகரத்துக்கு மின்சாரம் அளிக்கும் ஒரு பெரிய மின் நிலையத்துக்கு நிலக்கரி வரத்து குறைந்தது.

    ஆனால் மத்திய மின்சார அமைச்சகம் இதை ஏற்றுக் கொள்ளாமல் நெருக்கடியை நீர்த்துப் போகச்செய்யுமாறு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதாவது, “மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு நாட்டில் போதிய நிலக்கரி இருக்கிறது” என்று கூறுகிறது.

    இந்தியாவின் அனல் மின் நிலையங்களில் ஒரு வாரத்துக்கு நிலக்கரி இருக்கும். அவ்வளவுதான். நெருக்கடி அதிகமானால் நிலக்கரியை இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும் இதனால் மின் கட்டணம் உள்ளிட்டவை கடுமையாக உயரும் ஆபத்து உள்ளது. குறிப்பாக கிராமப்புற மின்வெட்டு அதிகமாக வாய்ப்புள்ளது என்கின்றனர் நிபுணர்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: