முகப்பு /செய்தி /இந்தியா / சிஎன்என்-நியூஸ்18 தொலைக்காட்சி அதிக பார்வையாளர்களுடன் தொடர்ந்து முதலிடம்!

சிஎன்என்-நியூஸ்18 தொலைக்காட்சி அதிக பார்வையாளர்களுடன் தொடர்ந்து முதலிடம்!

சிஎன்என்

சிஎன்என்

பார்க் (BARC - Broadcasting Audience Research council) வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, 47.2 விழுக்காட்டுடன் சிஎன்என் நியூஸ்18 முதலிடத்தில் இருக்கிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பார்வையாளர்களின் நன்மதிப்பின் வெளிப்பாடாக சிஎன்என்-நியூஸ்18 ஆங்கில தொலைக்காட்சியானது தொடர்ந்து 40 வாரங்களாக முதலிடத்தில் உள்ளது. நடப்பு ஜனவரி மாதத்தின் மூன்றாவது வாரத்தின் கணக்கீட்டின்படி, ரிபப்ளிக் டிவி மற்றும் டைம்ஸ் நவ் தொலைக்காட்சிகளின் மொத்த பார்வையாளர்களின் விகிதத்தைவிட அதிகம் பெற்றும் நியூஸ்18 தொலைக்காட்சி சாதனைப் படைத்துள்ளது.

நியூஸ் 18 கிட்டத்தட்ட பதினைந்து பிராந்திய மொழிகளில் தனது ஒளிபரப்பு சேவையை செய்து வருகிறது. நடுநிலை மாறாத, நம்பகத்தன்மையுடன் கூடிய செய்தி ஒளிபரப்புவதில் நியூஸ் 18 தனித்தன்மையுடன் விளங்குகிறது. அதனால் இந்தியா முழுவதும், அனைத்து மொழிகளிலும் ஏராளமான பார்வையாளர்களை கொண்டுள்ளது நியூஸ் 18 குழுமம்.

பார்க் (BARC - Broadcasting Audience Research council) வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, 47.2 விழுக்காட்டுடன் சிஎன்என் நியூஸ்18 முதலிடத்தில் இருக்கிறது. தொடர்ந்து 23.4 விழுக்காட்டுடன் ரிபப்ளிக் டிவி இரண்டாம் இடத்திலும், 18.3 விழுக்காட்டுடன் டைம்ஸ் நவ் டிவி மூன்றாம் இடத்திலும், 11.1 விழுக்காட்டுடன் மிர்ரர் நவ் நான்காம் இடத்திலும் இருக்கிறது.

பொதுமக்களின் இத்தகையை நம்பிக்கையை பெறுவதற்கு, சிஎன்என்-நியூஸ் 18 குழுமத்தின் மீதான நம்பகத்தன்மையே முதன்மை காரணம் என்றும், பொதுமக்களின் ஆதரவில்லாமல் இது சாத்தியமில்லை என்றும் தொலைக்காட்சியின் நிர்வாக ஆசிரியர் ஜாக்கா ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: CNN, News18