ஹோம் /நியூஸ் /இந்தியா /

அறிவு அனைத்து மக்களுக்கும் பயனளிக்க வேண்டும்.. 5 ரூபாய் மருத்துவர் ஷங்கரே கவுடா பேச்சு

அறிவு அனைத்து மக்களுக்கும் பயனளிக்க வேண்டும்.. 5 ரூபாய் மருத்துவர் ஷங்கரே கவுடா பேச்சு

5 ரூபாய் மருத்துவர் ஷங்கரே கவுடா

5 ரூபாய் மருத்துவர் ஷங்கரே கவுடா

CNN News18 Indian of the year 2022: சமூக மாற்றம் என்ற பிரிவில் கர்நாடகாவைச் சேர்ந்த ஐந்து ரூபாய் மருத்துவர் ஷங்கரே கவுடா சிஎன்என் நியூஸ் 18 சிறந்த இந்தியர் விருதை வென்றார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Delhi, India

  சிஎன்என் நியூஸ் 18 ஆண்டு தோறும் பல துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களை கண்டறிந்து விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி, 2022ஆம் ஆண்டின் சிறந்த இந்தியருக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் சமூக மாற்றத்திற்கான விருதை 5 ரூபாய் டாக்டர் என்று அழைக்கப்படும் கர்நாடகாவைச் சேர்ந்த மருத்துவர் ஷங்கரே கவுடா பெற்றார்.

  இவருக்கு விருதை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வழங்கி கவுரப்படுத்தினார். சுமார் 40 ஆண்டுகளாக மருத்துவராக இயங்கி வரும் மருத்துவர் கவுடா, தன்னிடம் மருத்துவம் பார்க்க வருபவர்களிடம் வெறும் 5 ரூபாய் மட்டுமே கட்டணமாக பெறுகிறார். எளிய மக்களும் நல்ல மருத்துவம் பெற வேண்டும் என்ற நோக்கில் மிகக் குறைந்த விலை மருந்துகளை மட்டுமே இவர் நோயாளிகளுக்கு பரிந்துரைத்து வருகிறார். இவரின் மருத்துவ சேவையால் நூற்றுக்கணக்கானோர் குணமடைந்து மனதார வாழ்த்து வருகின்றனர். இதன் காரணமாக இவரின் கர்நாடகா மட்டுமல்லாது மற்ற மாநிலங்களிலும் பரவியுள்ளது.

  விருது பெற்ற பின் நிகழ்வில் உரையாற்றிய மருத்துவர் கவுடா, "1982ஆம் ஆண்டு நான் மருத்துவப்படிப்பில் தேர்ச்சி பெற்றேன். அன்று தொடங்கி 40 ஆண்டுகள் நான் எனது சொந்த ஊரான மாண்டியாவில் பணியாற்றி வருகிறேன். அன்று தொடங்கி இன்று வரை ரூ.5 தான் கட்டணமாக வசூலிக்கிறேன். நாம் பெற்ற அறிவு என்பது பணம் கொண்டவர்களுக்கு மட்டுமே சேவை செய்யாமல் அனைத்து மக்களுக்கும் சென்று சேர வேண்டும் என்பதே எனது நோக்கம்.

  ஆண்டுதோறும் பல மருத்துவ மாணவர்கள் பட்டம் பெற்று வெளியே வருகின்றனர். அதில் மிகக் குறைவானார்களே கிராமத்தில் மருத்துவ சேவை செய்ய தயாராக இருக்கிறார்கள். மருத்துவர்களை கிராமத்தில் பணியாற்ற அரசு ஊக்குவிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

  இதையும் படிங்க: ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பிரிவில் சிறந்த இந்தியர் விருதை வென்ற Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு

  அமைச்சர் நிதின் கட்கரி பேசுகையில், "மருத்துவத்துறையில் மாணவர்கள் படிக்கும் போது நீதிநெறிமுறைகள் (Ethics) என்ற ஒரு பாடம் வரும். அந்த நெறிமுறைகளின் படி அனைத்து மருத்துவர்களும் பணியாற்ற வேண்டும். எளிய மக்களுக்கும் மருத்துவத்தை கொண்டு சேர்க்கும் வழிகாட்டியாக மருத்துவர் கவுடா இருக்கிறார். அவர் வழியில் அனைத்து மருத்துவர்களும் பணியாற்ற வேண்டும்" என்றார்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Doctor, Karnataka, Nitin Gadkari