Home /News /national /

ஆங்கில செய்தி சேனல்களில் முதல் இடம் பிடித்த CNN News18

ஆங்கில செய்தி சேனல்களில் முதல் இடம் பிடித்த CNN News18

சி.என்.என் - நியூஸ்18

சி.என்.என் - நியூஸ்18

CNN-News18 | தேசிய அளவில் ஆங்கில செய்தி சேனல்களில் முக்கிய செய்தி சேனல்களைப் பின்னுக்குத் தள்ளி சி.என்.என் - நியூஸ் 18 முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

    டி.ஆர்.பி எனப்படும் தொலைக்காட்சிகளுக்கான பார்வையாளர்களை பார்க்(BARC) என்ற அமைப்பு கணக்கிட்டு அறிவித்துவருகிறது. 2022-ம் ஆண்டின் 14-17 வாரங்களுக்கிடையேயான செய்தி தொலைக்காட்சிகளுக்கான பார்க் தரவுகளின் படி, ரிபப்ளிக் செய்தி சேனல் அதன் முதல் இடத்தை இழந்துள்ளது. ரிபப்ளிக் தற்போது மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

    இந்தியாவில் நகரம் மற்றும் கிராமப் புறப் பகுதிகளைச் சேர்த்து 26.3 சதவீத பார்வையாளர்களுடன் சி.என்.என் நியூஸ் 18 முதலிடத்தைப் பிடித்துள்ளது. திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரைலியான ப்ரைம் டைம் என்று அழைக்கப்படும் மாலை 6 மணி முதல் 11 மணி வரையிலான நேரத்தில் நியூஸ்18 தொலைக்காட்சிக்கு 40.2 சதவீத பார்வையாளர்கள் இருந்துள்ளனர். இந்த நேரத்தில் ரிபப்ளிக் சேனலுக்கு 25 சதவீத பார்வையாளர்களும், டைம்ஸ் நௌ தொலைக்காட்சிக்கு 20.2 சதவீத பார்வையாளர்களும் இருந்துள்ளனர்.

    இதுகுறித்து தெரிவித்த சி.என்.என் நியூஸ்18 தொலைக்காட்சியின் நிர்வாக ஆசிரியர் சக்கா ஜேக்கப், ‘நியூஸ்18 தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளையும், எங்களுடைய செய்திகளின் மீது நம்பிக்கை வைத்து மிகப்பெரும் வரவேற்பு கொடுத்த பார்வையாளர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: CNN-News18 crew

    அடுத்த செய்தி