ஹோம் /நியூஸ் /இந்தியா /

உபியில் 57 தொகுதிகளில் 6-ம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பு!

உபியில் 57 தொகுதிகளில் 6-ம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பு!

யோகி ஆதித்யநாத்

யோகி ஆதித்யநாத்

பாஜக சார்பில் போட்டியிடும் யோகி ஆதித்யநாத்தை எதிர்த்து, சமாஜ்வாடி கட்சி சார்பில் சுபவதி சுக்லாவும், ஆசாத் சமாஜ் கட்சியின் சார்பில் சந்திரசேகர் ஆசாத்தும் களம் இறங்கியுள்ளனர்.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  உத்தரபிரதேச மாநிலத்தில் 57 தொகுதிகளில் 6ம் கட்ட தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

  அங்குள்ள 403 சட்டமன்ற தொகுதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது.. இதுவரை 5 கட்ட தேர்தல்கள் முடிந்துள்ள நிலையில், இன்று 6ம்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது.

  10 மாவட்டங்களில் உள்ள 57 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், தாம் போட்டியிடும் கோரக்பூர் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வாக்களித்தார்.

  Also read... பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த சோசியல் மீடியா பிரபலம் கிலி பால்! 

  இத்தொகுதியில், பாஜக சார்பில் போட்டியிடும் யோகி ஆதித்யநாத்தை எதிர்த்து, சமாஜ்வாடி கட்சி சார்பில் சுபவதி சுக்லாவும், ஆசாத் சமாஜ் கட்சியின் சார்பில் சந்திரசேகர் ஆசாத்தும் களம் இறங்கியுள்ளனர்.

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Election 2022, Uttar pradesh