மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே சட்ட மேலவை உறுப்பினராக தேர்வு!

மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே. (கோப்புப் படம்)

தனது முதலமைச்சர் பதவியை உத்தவ் தாக்கரே தக்கவைத்துள்ளார்.

 • Share this:
  மகாராஷ்டிரா முதலமைச்சரும், சிவசேனா கட்சி தலைவருமான உத்தவ் தாக்கரே உள்ளிட்ட 9 பேர் சட்ட மேலவை உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

  கடந்த ஆண்டு நவம்பர் 28-ஆம் தேதி முதலமைச்சராக பதவியேற்ற உத்தவ் தாக்கரே, 6 மாதங்களுக்குள் சட்டமன்ற தேர்தல் அல்லது மேலவை உறுப்பினராக தேர்வானால் மட்டுமே பதவியை நீடிக்க முடியும் என்ற நிலையில் தேர்தல் தேதி குறித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிடாமல் இருந்தது.

  இது குறித்து பிரதமரிடம் உத்தவ் தாக்கரே முறையிட்ட நிலையில் மே 21 -ல் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. வேட்புமனு தாக்கலுக்கான இறுதி நாள் கடந்த 12-ஆம் தேதியுடன் நிறைவடைந்ததால் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட 9 பேர் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். தனது முதலமைச்சர் பதவியை உத்தவ் தாக்கரே தக்கவைத்துள்ளார்.


  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
  Also see...
  Published by:Vinothini Aandisamy
  First published: