ஆன்மீக குருவுக்கு கோவில் கட்டி கொண்டாடும் முதல்வர் ரங்கசாமி..
ஆன்மீக குருவுக்கு கோவில் கட்டி கொண்டாடும் முதல்வர் ரங்கசாமி..
ஆன்மீக குருவுக்கு கோயில் கட்டி கொண்டாடும் முதல்வர் ரங்கசாமி..
CM Rangasamy | அப்பா பைத்தியம் சுவாமிகளின் மீது கொண்ட அதீத பக்தியால் புதுச்சேரி திலாசுப்பேட்டையில் தனது வீட்டு அருகில் ரங்கசாமி, சுவாமிக்காக தனி கோவிலையும் கட்டியுள்ளார்.
புதுச்சேரி முதல்வரான ரங்கசாமி ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்டவர். ஜமீன் பரம்பரையில் பிறந்து, துறவரம் மேற்கொண்டு, தானத்தில் சிறந்தது அன்னதானம் என்ற கொள்கையை பரப்பியவர் அப்பா பைத்தியம் சுவாமிகள்.
புதுச்சேரியில் அப்பா பைத்தியம் சுவாமிகள் வந்தபோது அவரின் ஆசியை ரங்கசாமி பெற்றார். அன்று முதல் அப்பா பைத்தியம் சுவாமிகளை தனது ஆன்மிக குருவாக ஏற்றுக்கொண்டு ரங்கசாமி வழிபட்டு வருகிறார். சேலத்தில் உள்ள சூரமங்கலத்தில் அப்பா பைத்தியம் சுவாமிகள் ஜீவசமாதியடைந்தார். அங்கேயே அவருக்கு கோயில் அமைக்கப்பட்டுள்ளது. அப்பா பைத்தியம் சுவாமிகளின் அருளாசியால் முதலமைச்சர் பதவியை பெற்ற ரங்கசாமி, அரசியலிலும், சொந்த வாழ்க்கையிலும் எந்த முடிவு எடுக்க வேண்டும் என்றாலும் சேலம் அப்பா பைத்தியம் சுவாமி கோவிலுக்கு செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
அப்பா பைத்தியம் சுவாமிகளின் மீது கொண்ட அதீத பக்தியால் புதுச்சேரி திலாசுப்பேட்டையில் தனது வீட்டு அருகில் ரங்கசாமி, சுவாமிக்காக தனி கோவிலையும் கட்டியுள்ளார். அங்கு நாள்தோறும் சென்று வழிபாடு செய்வதை ரங்கசாமி வாடிக்கையாக கொண்டுள்ளார். இன்று அப்பா பைத்தியம் சுவாமிகளின் 163வது பிறந்தநாள் குருபூஜை விழா நடந்தது.
சேலம் சூரமங்கலம் கோயிலில் ஸ்ரீசற்குரு அப்பா பைத்தியம் சாமிகளின் 163 வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. சேலம் சூரமங்கலத்தில் உள்ள சாமிகளின் கோயிலில் அதிகாலை யாக சாலை பூஜையுடன் நடந்தது. உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தனது துணைவியாருடன் பங்கேற்று வழிபட்டார். இதனை தொடர்ந்து நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்ற அமைச்சர் அன்னதானத்தை துவக்கி வைத்தார்.
அதே வேளையில் முதலமைச்சர் ரங்கசாமி புதுச்சேரியில் அவர் கட்டிய கோவிலில் அப்பா பைத்தியம் சுவாமிகளுக்கு பூஜை, ஆராதனையை தானே செய்து வழிபாடு நடத்தினார். ரங்கசாமியை தொடர்ந்து புதுச்சேரியில் பல்வேறு கட்சியினரும் அப்பாசாமிகளை வழிபடுகின்றனர்.
ஆன்மீக குருவுக்கு சொந்தமாக ஒரு கோயிலை கட்டி வாரம் தோறும் சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜையை ரங்கசாமியே செய்து பக்தர்களுக்கு அவரே அன்னதானம் செய்து வருகிறார். அப்பாசாமிகளுக்கு ஜீவ சாமாதி சேலம் சூரமங்கலத்தில் இருந்தாலும் புதுச்சேரியில் ரங்கசாமி கட்டிய கோயிலை அவரது ஆதரவாளர்கள் வழிபடுவது சேலம் கோயிலுக்கும் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
யார் இந்த அப்பாசுவாமிகள்...
அப்பா சாமிகள் கருவூர் கோட்டை ஜமீன் பரம்பரையில் 1859 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 28ஆம் நாள் புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தார். அவர் தனது 16 ஆவது வயதில் வீட்டை விட்டு வெளியேறி பழனி மலையை அடைந்து அங்கு தவத்திரு அழுக்கு சுவாமிகளை குருவாகக் கொண்டு ஞானம் கைவரப் பெற்றார். தன் குருநாதர் மூலம் பலவற்றை அறிந்துகொண்ட அவர் எல்லோரையும் ஒன்று போல் பாவித்து, யார் எதை ஆத்மார்த்தமாக கேட்கிறார்களோ அதைத் தருவது இவரது சிறப்பு குணமாகும்.
ஏழை எளிய மக்களின் பசியைப் போக்க அன்னதானத்தை ஆரம்பித்தார். பழுதடைந்த ஆலயங்களை திருப்பணி செய்து குடமுழுக்கு செய்தார். ஏழை எளிய மக்களுக்கு திருமணம் நடத்தி வைத்தார். தன்னை நாடி வரும் அன்பர்களின் உடல், மனக் குறைகளை நீக்குதல் சாமிகளின் அருள் செயலாகும். சுவாமிகள் தன்னை, ";நான் ஒரு பைத்தியம்" என்று சொல்வார்.
மேலும் பக்தர்கள் அவரை "அப்பா" என்றும் அழைத்தார்கள். அன்றிலிருந்து அவருக்கு "அப்பா பைத்தியம்" சுவாமிகள் என்று பெயர் வந்தது. தனக்கென்று மடம் வைத்துக் கொள்பவர்களும், காசினை கையால் தொடுவதும் தனக்கென்று ஒரு சீடனை வைத்துக்கொண்டு இருப்பவனும், நான் எனது என்று பேசுவதும் சன்னியாசி இல்லை.. சம்சாரி என்று தனது கொள்கைக்கு ஏற்ப வாழ்ந்தார். சுவாமிகள் நிறைவாக தமது 141வது வயதில் சேலம் சூரமங்கலத்தில் சத்குரு மாளிகை என்னும் இடத்தில் கை 28ஆம் நாள் அஸ்வினி நட்சத்திரத்தில் திருவருளில் கலந்தார்.
Published by:Esakki Raja
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.