தங்கக்கடத்தல் வழக்கில் அரசுக்கு தொடர்பில்லை - கேரள முதல்வர் பினராயி விஜயன் விளக்கம்..
தங்கக்கடத்தல் வழக்கில் அரசுக்கு தொடர்பில்லை - கேரள முதல்வர் பினராயி விஜயன் விளக்கம்..
பினராயி விஜயன்
தங்கம் கடத்தல் விவகாரத்தில் முதலமைச்சர் பினராயி விஜயனை பதவி விலக வலியுறுத்தி திருவனந்தபுரத்தில் தலைமை செயலகம் முன் பாஜக இளைஞர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கேரள தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கரனுக்கும், அரசுக்கும் எந்த தொடர்பும் கிடையாது என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் விளக்கமளித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தங்கம் கடத்தல் வழக்கில் சிவசங்கரனுக்கு தொடர்பு இருப்பதாக புகார் எழுந்ததை அடுத்து உடனடியாக அவரை பதவியில் இருந்து நீக்கிவிட்டதாகக் கூறினார்.
இந்த சம்பவம் குறித்து விரிவாக விசாரணை நடத்தும்படி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதாகவும், சிவசங்கரன் சார்ந்த விஷயங்களில் அரசு மீது குறைகூறக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார்.
மேலும், முந்தைய காங்கிரஸ் அரசு தான் சிவசங்கரனை முதன்மை செயலாளர் பதவிக்கு பரிந்துரைத்ததாகவும், குறிப்பிட்டார். இதனிடையே, தங்கம் கடத்தல் விவகாரத்தில் முதலமைச்சர் பினராயி விஜயனை பதவி விலக வலியுறுத்தி திருவனந்தபுரத்தில் தலைமை செயலகம் முன் பாஜக இளைஞர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.