புதுச்சேரியில் கடந்த ஒரு வாரமாக மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் கிராமப்புற பகுதிகளில் விளை நிலங்களில் மழைநீர் தேங்கி விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதிகளை முதல் அமைச்சர் நாராயணசாமி, வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன் ஆகியோர் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தனர். கொடாத்தூர், குச்சிப்பாளையம், பத்துக்கண்ணு, ஊசுடு, பாகூர், கன்னியா கோயில் உட்பட பல கிராமங்களில் 15,000 ஏக்கரில் பயிரிடப்பட்ட விவசாய நிலங்களில் அறுவடைக்கு தயாரான பயிர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றை அவர்கள் பார்வையிட்டனர்.
அப்போது விவசாய நிலத்தில் இறங்கிய முதல் அமைச்சர் நாராயணசாமி நீரில் மூழ்கியுள்ள நெற்பயிர்களை பார்வையிட்டார். பார்வையிட்டு மேலே வந்த நாராயணசாமி கால் முழுவதும் சேறாக இருந்தது. உடனடியாக அங்கிருந்த விவசாயி ஒருவர் அவர் காலில் தண்ணீர் ஊற்றி கழுவினார். ஆனால் இதற்கு முதலமைச்சர் ஊருக்கு சோறு போடும் உங்கள் காலை நான்தான் தொட்டு கும்பிடவேண்டும். என் காலை தொடாதீர்கள் எனகூறி அவருக்கு நன்றி தெரிவித்து அவரே கழுவி புறப்பட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதலமைச்சர் நாராயணசாமி, தொடர் மழையால் புதுச்சேரியில் 90 சதவீத விவசாய நிலங்கள் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இந்த பயிரை அறுவடை செய்ய முடியாது. இதனால் விவசாயிகள் 100 சதவிதம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து விவசாய காப்பீடு நிறுவனங்களுடன் பேசி இருப்பதாகவும் அமைச்சரவை கூடி விவசாயிகளுக்கு எந்த வகையில் நிவாரணம் வழங்க முடியும் என ஆலோசிக்க இருப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
விவசாய நிலங்களை ஆய்வுசெய்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து விவசாயிகள் அரசு நிவாரண தொகையை விட காப்பீட்டு நிவாரண தொகையை உடனடியாக கிடைத்தால் நல்லது என்றனர்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.