Home /News /national /

உலக செவிலியர் தினம்: அர்ப்பணிப்புடன் செயல்படும் செவிலியர்களுக்கு புதுவை முதல்வர் நாராயணசாமி பாராட்டு!

உலக செவிலியர் தினம்: அர்ப்பணிப்புடன் செயல்படும் செவிலியர்களுக்கு புதுவை முதல்வர் நாராயணசாமி பாராட்டு!

International Nurse Day | ”செவிலியர்களின் தியாகத்திற்கு உரிய கவுரவம் செலுத்தப்படும்”

International Nurse Day | ”செவிலியர்களின் தியாகத்திற்கு உரிய கவுரவம் செலுத்தப்படும்”

International Nurse Day | ”செவிலியர்களின் தியாகத்திற்கு உரிய கவுரவம் செலுத்தப்படும்”

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. முதலமைச்சர் நாராயணசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், இயக்குனர் மோகன்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

அந்தக் கூட்டத்தில் செவிலியரின் பணிகளைப் பாராட்டிப் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரியில் செவிலியரின் அர்ப்பணிப்பு காரணமாக கொரோனா நோய் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் அவர்களின் தியாகத்திற்கு உரிய கவுரவம் செலுத்தப்படும் என்றும் கூறினார்.

செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் ஆகியோர் அரசுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் கொரோனா இல்லாத மாநிலமாக புதுச்சேரி மாறும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.  தினமும் செவிலியரின் அர்ப்பணிப்பை நினைத்துதான் தன்னுடைய வேலையைத் தொடங்குவதாக முதலமைச்சர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




Also see:
Published by:Rizwan
First published:

Tags: CoronaVirus, Narayana samy, Nurses day, Puducherry

அடுத்த செய்தி