ஹோம் /நியூஸ் /இந்தியா /

புதிய கல்விக்கொள்கைக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி எதிர்ப்பு

புதிய கல்விக்கொள்கைக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி எதிர்ப்பு

புதுச்சேரி நகரத்தின் பல பகுதிகளுக்கு முதல்வர் நாராயணசாமி இன்று சென்று ஆய்வு மேற்கொண்டார்கள்.

புதுச்சேரி நகரத்தின் பல பகுதிகளுக்கு முதல்வர் நாராயணசாமி இன்று சென்று ஆய்வு மேற்கொண்டார்கள்.

மும்மொழி கட்டாயத் திட்டம் ஏற்புடையதல்ல என்றும் சமஸ்கிருதத் திணிப்பை எந்தக் காலத்திலும் ஏற்கமாட்டோம் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  தமிழகத்தில் ஞாயிற்றுகிழமையான இன்று முழு ஊடரங்கு அமலில் இருந்தபோதிலும் புதுச்சேரியில் முழு ஊடரங்கு கிடையாது. இந்த நிலையில் புதுச்சேரி நகரத்தின் பல பகுதிகளுக்கு முதல்வர் நாராயணசாமி இன்று சென்று ஆய்வு மேற்கொண்டார்க. பழைய பேருந்து நிலையத்தில் உள்ள உழவர் சந்தைக்குச் சென்று அங்குள்ள வியாபாரிகளிடம் சமூக இடைவெளியைக் கடைபிடித்து பொருட்களை விற்குமாறு கேட்டுக் கொண்டார். பொதுமக்களிடம் முறையாக முகக்கவசம் அணிந்து பொருட்களை வாங்குமாறும் வேண்டுகோள் விடுத்தார்.

  இதனைத் தொடர்ந்து  தற்காலிக மீன் மார்க்கெட், தட்டாஞ்சாவடி கமிட்டியில் உள்ள தற்காலிக காய்கறி மார்க்கெட், கருவடிக்குப்பம் வழியாக முத்தியால்பேட்டை மார்க்கெட் மற்றும்  செஞ்சி சாலையில் உள்ள தற்காலிகக் கடைகள் முதலானவற்றை ஆய்வு செய்தார்.

  Also read: கொரோனா தடுப்பு மருந்து அனைவருக்கும் சென்றடைய நீண்டகாலம் ஆகும் - உலக சுகாதார அமைப்பு

  ஆய்வுக்கு பின்னர் அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி புதுச்சேரியில் இனி கொரோனாவில் பாதிக்கப்பட்டவர் வீடு மட்டும் தனிமைப்படுத்தப்படும். தேவைப்படுவோர் வீட்டிலேயே தங்கவைத்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

  மேலும், பல மாநிலங்களில் சித்தா மருந்தில் கொரோனா நோயாளிகள் குணமடைவதால் புதுச்சேரியிலும் கொரோனா நோயாளிகளுக்கு சித்தா முறையிலும் சிகிச்சை அளிக்க மருத்துவ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகக் கூறினார்.

  புதிய கல்வி கொள்கையால் புதுச்சேரியில் மிக பெரிய மாற்றம் ஏற்படாது. மும்மொழி கட்டாயத் திட்டம் ஏற்புடையதல்ல. சமஸ்கிருதத்தைத் திணிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. மத்திய அரசின் இந்தித் திணிப்பை எந்த காலத்திலும் ஏற்க மாட்டோம் என்றும் முதல்வர் நாராயணசாமி கூறினார்.

  Published by:Rizwan
  First published:

  Tags: Narayana samy, New Education Policy