Home /News /national /

டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

நரேந்திர மோடி - மு.க.ஸ்டாலின்

நரேந்திர மோடி - மு.க.ஸ்டாலின்

CM MK Stalin | டெல்லி பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியை நேரில் சந்தித்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு பயணமாக நேற்று சென்னையிலிருந்து டெல்லி சென்றார். டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலினை மைச்சர்கள் துரைமுருகன் கே.என். நேரு, பொன்முடி, மா.சுப்பிரமணியன் தா.மோ.அன்பரசன் சேகர்பாபு ஆவடி நாசர் உள்பட பலர் வழியனுப்பி வைத்தனர்.

    டெல்லியில் புதிததாக குடியரசு தலைவர் பதவிக்கு பொறுப்பேற்றுள்ள திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து வாழ்த்தினார். அதை தொடர்ந்து துணை குடியரத் தலைவர் ஜெகதீப் தன்கர் அவர்களையும் நேரில் சந்தித்து வாழத்து தெரிவித்தார்.

    இதன்பின் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், ரவுபதி முர்முவுடனான சந்திப்பு தனக்கு மன நிறைவை தந்ததாகவும் புதிதாக பொறுப்பு ஏற்றிருப்பதால் அவரிடம் நீட் தேர்வு விலக்கு உட்பட எந்த கோரிக்கையையும் தாம் முன் வைக்கவில்லை எனவும் தெரிவித்தார். ஜனாதிபதியை மரியாதை நிமித்தமாக அவருக்கு வாழ்த்துச் சொல்லவே சந்தித்ததாக முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

    Also Read : கனல் கண்ணன் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்

    மேலும்பிரதமர் மோடியை நேரில் சந்திக்கவுள்ள தாம், செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் கலந்துகொண்டதற்காக நன்றி தெரிவிக்க இருப்பதாக தெரிவித்தார். அதைத் தொடர்ந்து நீட் தேர்வு விலக்கு, புதிய கல்விக் கொள்கை, காவிரி, மேககாது அணை பிரச்சனைகள் பற்றி பிரதமரிடம் நினைவூட்ட உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். குறிப்பாக இந்த 2 காரணங்களுக்காக தான் பிரதமரை தாம் சந்திக்க உள்ளதாக தெரிவித்திருந்தார்.
    Published by:Vijay R
    First published:

    Tags: CM MK Stalin, Delhi, PM Narendra Modi

    அடுத்த செய்தி