Home /News /national /

டெல்லியில் பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கொடுத்த நினைவுபரிசு என்ன தெரியுமா?

டெல்லியில் பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கொடுத்த நினைவுபரிசு என்ன தெரியுமா?

பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கொடுத்த நினைவுபரிசு

பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கொடுத்த நினைவுபரிசு

டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் ஸ்டாலின் செஸ் ஒலிம்பியாட் குறித்த நூல் மற்றும் நினைவுப் பரிசை வழங்கி கௌரவித்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு பயணமாக நேற்று சென்னையிலிருந்து டெல்லி சென்றார். டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலினை மைச்சர்கள் துரைமுருகன் கே.என். நேரு, பொன்முடி, மா.சுப்பிரமணியன் தா.மோ.அன்பரசன் சேகர்பாபு ஆவடி நாசர் உள்பட பலர் வழியனுப்பி வைத்தனர்.

    டெல்லியில் புதிததாக குடியரசு தலைவர் பதவிக்கு பொறுப்பேற்றுள்ள திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து வாழ்த்தினார். அதை தொடர்ந்து துணை குடியரத் தலைவர் ஜெகதீப் தன்கர் அவர்களையும் நேரில் சந்தித்து வாழத்து தெரிவித்தார்.

    Also Read : நீதிமன்றம் தீர்ப்புக்கு பின் ஜெ. நினைவிடம் வந்த ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி

    இதையடுத்து மாலை 4 மணி அளவில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த நினைவு நூலை பிரதமரிடம் வழங்கினார். மேலும் தமிழகத்தின் பாரம்பரிய நெல் வகைகள், சிறு தானியங்களை பரிசாக வழங்கினார். பிரதமர் மோடிக்கு பூங்கொத்து கொடுத்து சால்வை அணிவித்தும் தனது மரியாதை முதல்வர் ஸ்டாலின் வெளிப்படுத்தினார்.



    பிரதமர் மோடியை சந்திப்பதற்கு முன் டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் கலந்துகொண்டதற்காக நன்றி தெரிவிக்க இருப்பதாக தெரிவித்தார். அதைத் தொடர்ந்து நீட் தேர்வு விலக்கு, புதிய கல்விக் கொள்கை, காவிரி, மேககாது அணை பிரச்சனைகள் பற்றி பிரதமரிடம் நினைவூட்ட உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். குறிப்பாக இந்த 2 காரணங்களுக்காக தான் பிரதமரை தாம் சந்திக்க உள்ளதாக தெரிவித்திருந்தார்.
    Published by:Vijay R
    First published:

    அடுத்த செய்தி