தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டில் மோடி தலையீடு: சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு!

சந்திரபாபு நாயுடு

தேர்தல் ஆணையமோ, ஒப்புகைச் சீட்டுகளை எண்ணுவதற்கு 6 நாட்கள் வரை ஆகும் என உச்சநீதிமன்றத்தில் தவறான தகவல்களை அளித்துள்ளதாக குற்றஞ்சாட்டிய சந்திர்பாபு நாயுடு, பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின்படியே தேர்தல் ஆணையம் செயல்படுவதாகவும் விமர்சித்தார்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  இந்தியாவின் தன்னாட்சி அமைப்பான தேர்தல் ஆணையம், பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின்படியே செயல்படுவதாக, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டியுள்ளார்.

  ஆந்திராவில் கடந்த 11-ம் தேதி முதற்கட்ட மக்களவைத் தேர்தலும், சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்றது. அப்போது பல இடங்களில் தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடையே மோதல் வெடித்தது.

  இதில் 2 பேர் கொல்லப்பட்ட நிலையில், பல இடங்களில் வாக்குச் சாவடிகள் சூறையாடப்பட்டன. இதனிடையே, பல்வேறு வாக்குச் சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிவர இயங்காததால், வாக்குப்பதிவு பல மணிநேரம் நிறுத்தப்பட்டு, பின்னர் மாற்று எந்திரங்கள் மூலம் நள்ளிரவு வரை தேர்தல் நடத்தப்பட்டது.

  இதையடுத்து, டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையரைச் சந்தித்த ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, வன்முறை நடைபெற்ற வாக்குச் சாவடிகளில் மறுதேர்தல் நடத்தக் கோரி மனு அளித்தார்.

  பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், யாருக்கு வாக்களித்தோம் என உறுதி செய்யும் ஒப்புகைச் சீட்டுகளை அதிகபட்சம் 24 மணி நேரத்தில் எண்ணி முடிக்க முடியும் என்றும், இதன்மூலம் கள்ள ஓட்டுகளை தடுக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

  ஆனால், தேர்தல் ஆணையமோ, ஒப்புகைச் சீட்டுகளை எண்ணுவதற்கு 6 நாட்கள் வரை ஆகும் என உச்சநீதிமன்றத்தில் தவறான தகவல்களை அளித்துள்ளதாக குற்றஞ்சாட்டிய சந்திர்பாபு நாயுடு, பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின்படியே தேர்தல் ஆணையம் செயல்படுவதாகவும் விமர்சித்தார்.

  Also see...


  தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.  Published by:Vinothini Aandisamy
  First published: