• HOME
 • »
 • NEWS
 • »
 • national
 • »
 • சட்டீஸ்கர் முதல்வர் தந்தை நந்த குமார் யார்? அவரது சாதி எதிர்ப்பு அரசியல் என்ன?

சட்டீஸ்கர் முதல்வர் தந்தை நந்த குமார் யார்? அவரது சாதி எதிர்ப்பு அரசியல் என்ன?

சட்டீஸ்கர் முதல்வரின் தந்தை கைது.

சட்டீஸ்கர் முதல்வரின் தந்தை கைது.

பிராமண சாதியினரை பற்றி அவதூறாக பேசியதாக சட்டீஸ்கர் மாநில முதல்வரின் 86 வயது தந்தை நந்தகுமார் கைது செய்யப்பட்டார். ஆனால் இவர் தொடர்ந்து சாதி எதிர்ப்பு அரசியலில் தீவிரமாக இருந்து வந்தவர் என்று தெரிகிறது.

 • Share this:
  பிராமணர்கள் அந்நியர்கள், அவர்களை கிராமத்திற்குள் நுழைய விடக்கூடாது, நாட்டை விட்டே பிராமணர்களை விரட்ட வேண்டும் என்று பூபேஷ் பாகலின் தந்தை நந்த் பாகெல் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியது, மேலும் பிராமண இயக்கங்கள் நந்த் பாகெலும் கடும் எதிர்ப்பை தெரிவித்து போராட்டத்தில் குதித்தன. பேரணிகளும் நடத்தப்பட்டது.

  முதல்வரும் மகனுமான பாகெல், “குறிப்பிட்ட சாதியினர் குறித்து எனது தந்தை ஆட்சேபத்தக்க வகையில் கருத்துக்களை தெரிவித்திருப்பதாக அறிந்தேன், சமுதாய நல்லிணக்கத்துக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அவர் பேசியிருக்கிறார், குறிப்பிட்ட சாதியினரின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளார், இதனால் நானும் மனவேதனை அடைந்துள்ளேன்.” என்று கூறியதோடு சட்டத்திற்கு மேல் யாரும் பெரியவர்கள் கிடையாது எனவே தந்தை மீது சட்டம் தன் கடமையைச் செய்யட்டும் என்று தெரிவித்துள்ளார்.
  கைது செய்யப்பட்ட நந்தகுமார் தன்னை ஜாமீனில் விடுவிக்கும்படி கோரவில்லை என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். முதல்வர் பாகெலைப் பொறுத்தவரை தன் தந்தை இப்படி நடந்து கொள்வது பேசுவது புதிதல்ல.

  தந்தை நந்தகுமார் ஒரு முற்போக்குவாதி, விவசாயி:
  பாகெல் குடும்பத்தினர் தகவல்களின்படி முதலமைச்சர் பூபேஷ் பாகெலின் தந்தை நந்தகுமார் ஒரு முற்போக்கு சிந்தனை கொண்டவர், விவசாயி, சட்டீஸ்கர் மாநிலம் குருத்தி கிராமத்தில் வசித்து வருபவர். எப்போதும் இவர் சாதி ஆதிக்கவாதத்துக்கு எதிராகக் குரல் கொடுத்து வந்துள்ளார். இந்து மதத்தில் உள்ள சாதியத்தை அவர் கடுமையாக எதிர்த்ததாகக் கூறப்படுகிறது.

  அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுவதன் படி எப்போதும் ஆதிக்கவாத சாதிகளுக்கு எதிராக பேசி வந்திருக்கிறார் நந்தகுமார், பட்டியல் வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினருக்காக இவர் எப்போதும் குரல் கொடுப்பவர் என்கின்றனர், இதைத்தான் அவர் வாழ்க்கையாகவே கொண்டிருந்தார் என்கின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள்.
  இதனால் அவர் அடிக்கடி பல சர்ச்சைகளில் சிக்குவதுண்டு. Brahman Kumar Rawan ko Mat Marro என்று 2001-ல் ஒரு புத்தகம் எழுதினார்.

  ராவணனின் உருவ பொம்மையை எரிக்காதீர்கள் என்று அவர் கூறினார். இந்தப் புத்தகத்தில் அவர் கூறிய சில கருத்துக்கள் கடும் சர்ச்சைகளைக் கிளப்ப புத்தகம் தடை செய்யப்பட்டது. அப்போது அஜித் ஜோகி முதல்வராக இருந்தார். நந்தகுமார் தடையை எதிர்த்து மனு செய்தார் ஆனாலும் பலனில்லை. 1970-களில் நந்தகுமார் பவுத்த மதத்தை தழுவினார், இதன் பிறகு சாதி ஆதிக்கவாதம் குறித்து அவரது விமர்சனங்கள் கூர்மையடைந்தன.

  ஒரு சமயத்தில் 2018-ல் காங்கிரஸ் தலைமைக்கு எழுதிய கடிதத்தில் காங்கிரஸ் கட்சியில் தேர்தல் இடங்களை எஸ்.சி. , எஸ்.டி மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கொடுங்கள், பிராமணர்கள், தாக்கூர்க்ள், பனியாக்களுக்குக் கொடுக்காதீர்கள் என்று கூறியுள்ளார்.

  அவருக்கு நெருக்கமான பத்திரிகையாளர் லக்கன் வெர்மா, தி பிரிண்ட் ஆங்கில ஊடகத்திடம் கூறும்போது,  “சாதி ஆதிக்கத்துக்கு எதிராகவும் இந்துத்துவாவுக்கு எதிராகவும் அவரது விமர்சனம் கடுமையானது அவர் புத்த மதத்தை தழுவிய பிறகுதான்” என்கிறார்.
  நந்தகுமார் முழுநேர அரசியலில் ஈடுபட்டதில்லை. நிறைய புத்தகங்கள் படிப்பார். 1980-களில் ஒருமுறை தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

  முதல்வர் பாகெல் எப்போதும் தன் தந்தையை கண்டிப்பதுண்டு, பொது இடங்களில் எந்த ஒரு அமைப்பையோ, சாதியையோ இழிவு படுத்தி பேச வேண்டாம், விமர்சனம் செய்ய வேண்டாம் என்று கண்டிப்பாராம். ஆனால் தந்தை கேட்கக் கூடியவர் அல்ல. இதனால் இருவருக்குமான வேற்றுமைகள் வளர்ந்தன. அதாவது நந்தகுமார் தன் மகனிடம், ‘நான் எனக்குச் சரி என்பதைப்பேசுகிறேன், இதற்காக நான் யார் அனுமதியையும் பெற வேண்டியதில்லை’ என்று கூறியதாகத் தெரிகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  கிராமத்தினர் கூறும் இன்னொரு சம்பவம் என்னவெனில் நந்தகுமார் மனைவி காலமான போது உடலுக்கு பவுத்த தர்மங்களின்படிதான் இறுதிச் சடங்கு செய்ய வேண்டும் என்று தந்தை நந்தகுமார் வலியுறுத்த பூபேஷ் பாகெல் மறுக்க, கடைசியில் இந்து தர்மத்தின் படிதான் இறுதிச் சடங்கு நடத்தப்பட்டது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Muthukumar
  First published: