முகப்பு /செய்தி /இந்தியா / 'காங்கிரஸில் அமைதி, சகோதரத்துவம் நீடித்திருக்கும்...' சச்சின் பைலட் மனமாறிய நிலையில் கெலாட் பேட்டி!

'காங்கிரஸில் அமைதி, சகோதரத்துவம் நீடித்திருக்கும்...' சச்சின் பைலட் மனமாறிய நிலையில் கெலாட் பேட்டி!

சச்சின் பைலட் | அசோக் கெலாட்

சச்சின் பைலட் | அசோக் கெலாட்

ராஜஸ்தானில் முன்னாள் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் மீண்டும் காங்கிரஸ் முகாமிற்கு திரும்பியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சிக்குள் அமைதியும், சகோதரத்துவம் நீடித்திருக்கும் என்று முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்தார்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

ஜெய்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சச்சின் பைலட் முன்வைத்த குறைகளை தீர்க்க மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். மாநிலத்தில் ஆட்சியை கவிழ்க்க பாஜகவினர் தங்களால் முடிந்த அளவுக்கு முயற்சித்ததாகக் குற்றம் சாட்டினார் அசோக் கெலாட்.

தொடர்ந்து பேசிய அவர், இறுதியில் காங்கிரஸில் அனைத்து எம்.எல்.ஏக்களும் ஒன்றுபட்டு இருப்பதாகவும், ஒரு எம்.எல்.ஏ கூட கட்சியை விட்டு விலகிச் செல்லவில்லை என்றும் தெரிவித்தார்.

Also read... கொரோனாவிலிருந்து மீண்ட கர்நாடக முதல்வர் எடியூரப்பா வீடு திரும்பினார்

மத்திய பாஜக அரசு வருமானவரித்துறை மற்றும் சிபிஐயை தவறாக பயன்படுத்தி வருவதாகவும், மதத்தின் பெயரில் அரசியல் செய்து வருவதாகவும் சாடிய அசோக் கெலாட், தனது தலைமையிலான அரசு 5 ஆண்டு ஆட்சியை பூர்த்தி செய்வதுடன், அடுத்த தேர்தலிலும் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

First published:

Tags: Rajastan