• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • டாடா வசம் ஏர் இந்தியா சென்ற பின் மத்திய அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு

டாடா வசம் ஏர் இந்தியா சென்ற பின் மத்திய அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு

ஏர் இந்தியா

ஏர் இந்தியா

ஏர் இந்தியா விமானங்களுக்கான அனைத்து புதிய டிக்கெட்டுகளும் பணத்தை ரொக்கமாக செலுத்தியே வாங்கப்பட்ட வேண்டும் என்றும் மத்திய நிதி அமைச்சகம் அறிவுறுத்தி இருக்கிறது.

  • Share this:
டாடா நிறுவனத்தால் தொடங்கப்பட்ட ஏர் இந்தியா விமான நிறுவனம் கடந்த 1953-ம் ஆண்டு மத்திய அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் ஏர் இந்தியா டாடா குரூப்பின் வசம் சென்று இருக்கிறது. கடுமையான நஷ்டத்தில் சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க பெரிதாக யாரும் ஆர்வம் காட்டாத நிலையில், விட்டதை பிடிக்கும் வகையில் டாடா சன்ஸ் நிறுவனம் ஏர் இந்தியாவை சுமார் ரூ.18 ஆயிரம் கோடிக்கு சில வாரங்களுக்கு முன் ஏலத்தில் எடுத்தது.

இதனை தொடர்ந்து ஏர் இந்தியாவினுடைய முழு பங்குகளையும் டாடா நிறுவனத்திற்கு விற்பனை செய்வதற்கான விருப்ப கடிதத்தை டாடா குழுமத்திடம் கடந்த 11-ம் தேதி மத்திய அரசு அளித்தது. இந்நிலையில் ஏர் இந்தியா பங்குகளை டாடா நிறுவனம் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் சமீபத்தில் கையழுத்தானது. இந்த சூழலில் கடனில் சிக்கி இருக்கும் ஏர் இந்தியாவின் நிலுவை தொகையை உடனடியாக செலுத்துமாறு மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளை மத்திய நிதியமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினத் துறை, ஏர் இந்தியாவை டாடா குழுமத்திற்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு குறிப்பிட்ட விமான நிறுவனத்திற்கான நிலுவைத் தொகைகளை உடனடியாக செலுத்த மத்திய அரசு துறைகளை கேட்டு கொண்டு உள்ளது. இது தவிர மத்திய அரசு அதிகாரிகள் ஏர் இந்தியா மூலம் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என்ற நிலையான உத்தரவையும் ரத்து செய்து மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.

Also Read : முல்லைப்பெரியாறு அணை விவகாரம் : தமிழக, கேரள முதலமைச்சர்கள் நேரில் ஆலோசிக்க திட்டம்

மேலும் ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகியவற்றில் மத்திய அரசின் அமைச்சகங்களுக்கும், பல்வேறு துறைகளும் டிக்கெட் வாங்குவதற்காக கொடுக்கப்பட்டிருந்த கடன் வசதி (credit facility) நிறுத்தப்பட்டுள்ளதாக இது தொடர்பான அறிவிப்பில் நிதியமைச்சகத்தின் செலவின துறை குறிப்பிட்டு உள்ளது. டாடா குழுமத்தால் ஏர் இந்தியா கையகப்படுத்தப்பட உள்ள நிலையில், அடுத்த உத்தரவு வரும் வரை ஏர் இந்தியா விமானங்களுக்கான அனைத்து புதிய டிக்கெட்டுகளும் பணத்தை ரொக்கமாக செலுத்தியே வாங்கப்பட்ட வேண்டும் என்றும் மத்திய நிதி அமைச்சகம் அறிவுறுத்தி இருக்கிறது.

முன்னதாக 2009-ல் மத்திய அரசு வெளியிட குறிப்பாணையின்படி, LTC (விடுப்பு பயணச் சலுகை - leave travel concession) உட்பட அதிகாரிகளுக்கான விமானப் பயணச் செலவை மத்திய அரசே ஏற்கும் பட்சத்தில், ஏர் இந்தியாவிடமிருந்து மட்டுமே டிக்கெட்டுகளை வாங்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் ஏர் இந்தியாவை டாடா நிறுவனத்திடம் ஒப்படைக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதால் மேற்காணும் புதிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன. ஏர் இந்தியாவை டாடா வசம் ஒப்படைக்கும் செயல்முறை அநேகமாக டிசம்பர் 2021-க்குள் முழுமையாக முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: