முகப்பு /செய்தி /இந்தியா / “கட்டணம் செலுத்தவில்லையா.. தேர்வு எழுதாதே...” - பள்ளி நிர்வாகத்தால் 9ம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு..!

“கட்டணம் செலுத்தவில்லையா.. தேர்வு எழுதாதே...” - பள்ளி நிர்வாகத்தால் 9ம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு..!

மாதிரி பாடம்

மாதிரி பாடம்

பள்ளிக் கட்டணம் செலுத்த முடியாத காரணத்தால் 9ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Uttar Pradesh, India

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பரேலி மாவட்டத்தில் உள்ள பாராதாரி என்ற பகுதியைச் சேர்ந்தவர் அசோக் குமார். இவரது 14 வயது மகள் அருகே உள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். சமீப காலமாகவே அசோக் குமார் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி வந்துள்ளார்.  இதன் காரணமாக தனது மகளுக்கு முறையாக பீஸ் கட்ட முடியாமல் தவித்து வந்தார்.

தன்னிடம் பணம் கிடைத்த பின்னர் பீஸ் கட்டி விடுகிறேன் என பள்ளி முதல்வரிடம் கூறியுள்ளார். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று அசோக் குமாரின் 14 வயது மகள் பள்ளிக்கு சென்றுள்ளார். அவருக்கு தேர்வு இருந்த நிலையில், பீஸ் கட்டாததை காரணம் காட்டி தேர்வு எழுத அனுமதிக்கவில்லை.

எத்தனையோ முறை கெஞ்சி பார்த்தும் தேர்வு எழுத அனுமதிக்காததால், மாணவி மனமுடைந்து வீடு திரும்பினார். உடனடியாக அறையில் தாழிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து உயிரிழந்தார்.

மாணவியின் செயலால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல்துறையிடம் புகார் அளித்தனர். மகளை இழந்து கதறி அழும் பெற்றோர் தங்கள் மகளின் இறப்புக்கு நீதி வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல் கண்காணிப்பாளர்  தெரிவித்துள்ளார்.

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

First published:

Tags: Fees, Student Suicide, Suicide