ஹோம் /நியூஸ் /இந்தியா /

4ம் வகுப்பு மாணவரை மாடியிலிருந்து கீழே தள்ளி கொலை செய்த ஆசிரியர்.. அதிர்ச்சி சம்பவம்!

4ம் வகுப்பு மாணவரை மாடியிலிருந்து கீழே தள்ளி கொலை செய்த ஆசிரியர்.. அதிர்ச்சி சம்பவம்!

கர்நாடகா க்ரைம்

கர்நாடகா க்ரைம்

நான்காம் வகுப்பு படிக்கும் 10 வயது மாணவரான பரத் என்பவரை ஆசிரியர் அடித்து உதைத்துள்ளார். மேலும் மாணவரை முதல் மாடியிலிருந்து கீழே தள்ளியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கர்நாடகாவில் ஆசிரியர் ஒருவர் 10 வயது மாணவரை மாடியிலிருந்து கீழே தள்ளி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு கர்நாடகாவின் கடாக் மாவட்டத்தில் உள்ள ஹாக்ளி (Hagli) கிராமத்தில் ஆதர்ஷ் என்ற அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது.

இங்கு ஒப்பந்த அடிப்படையில் முத்தப்பா என்ற ஆசிரியர் பணியாற்றி வருகிறார். இவர் நான்காம் வகுப்பு படிக்கும் 10 வயது மாணவரான பரத் என்பவரை அடித்து உதைத்துள்ளார். மேலும் மாணவரை முதல் மாடியிலிருந்து கீழே தள்ளியுள்ளார். இதில் பரத் உயிரிழந்தார். முத்தப்பா அதே பள்ளியில் பணியாற்றும் பரத்தின் தாயாரான கீதாவையும் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

குடும்ப பிரச்னை காரணமாக இந்த தாக்குதல் நடைபெற்றதாக கூறியுள்ள காவல்துறை முத்தப்பாவை தேடி வருகிறது.

First published:

Tags: Crime News