ஹோம் /நியூஸ் /இந்தியா /

உபியில் ஆசிரியரை 3 முறை துப்பாக்கியால் சுட்ட 10 ஆம் வகுப்பு மாணவர் - அதிர்ச்சி வீடியோ

உபியில் ஆசிரியரை 3 முறை துப்பாக்கியால் சுட்ட 10 ஆம் வகுப்பு மாணவர் - அதிர்ச்சி வீடியோ

சிசிடிவி காட்சி

சிசிடிவி காட்சி

உத்தரபிரதேசத்தில், 10 ஆம் வகுப்பு பள்ளி மாணவர் ஒருவர், அவரது ஆசிரியரை நாட்டு துப்பாக்கியால் சுட்ட வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Sitapur, India

  உத்தரபிரதேசம் சிதாப்பூரில் பள்ளி மாணவர் ஒருவர், ஆசிரியர் கண்டித்ததால், அவர் மீதுள்ள ஆத்திரத்தில் நாட்டு துப்பாக்கி ஒன்றை எடுத்து வந்து, அவரை 3 முறை சுட்டார். இந்த காட்சிகள் அனைத்தும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

  அதில் ஆசிரியரை மாணவர் தூப்பாக்கி கொண்டு துரத்துகிறார். பின்னர் அவரை 3 முறை நாட்டு துப்பாக்கியால் சுட்டார். அந்த ஆசிரியர் மாணவனிடம் இருந்து துப்பாக்கியை பிடுங்க முயற்சிக்கையில், அவரை துப்பாக்கியின் பின்புறத்தை கொண்டு தாக்கினார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக வந்து மாணவனை சூழ்ந்து துப்பாக்கியை பிடுங்க முயற்சித்தனர். இதனையடுத்து அவர் துப்பாக்கியுடன் தப்பி ஓடினார். காவல்துறையினர் தப்பி சென்ற மாணவரை தேடி வருகின்றனர்.

  இதையும் வாசிக்க: சட்டப்பேரவையில் புகையிலை பயன்படுத்திய பாஜக எம்.எல்.ஏ - வைரலாகும் வீடியோ

  இதனையடுத்து ஆசிரியர் லக்னோவில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். உடலின் முக்கிய உறுப்புகள் எதிலும் காயம் ஏற்படாததால், காயங்களுடன் ஆசிரியர் உயிர் தப்பினார்.

  இச்சம்பவம் குறித்து அவரிடம் கேட்டதற்கு, சாதரணமாக கண்டித்தது அந்த  மாணவரை இவ்வளவு ஆத்திரமடைய வைத்திருக்கும் என நினைக்கவில்லை என தெரிவித்தார்.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: School student, School Teacher, Uttar pradesh