Home /News /national /

இந்திய பள்ளி மாணவனுக்கு அமெரிக்காவில் கிடைத்த வேலை.. வயதால் நழுவிய வாய்ப்பு!

இந்திய பள்ளி மாணவனுக்கு அமெரிக்காவில் கிடைத்த வேலை.. வயதால் நழுவிய வாய்ப்பு!

வேதாந்த் மென்பொருள் பற்றிய அறிவை தானாகவே கற்றுக்கொண்டு பயின்றதாகத் தெரிவித்துள்ளான்

வேதாந்த் மென்பொருள் பற்றிய அறிவை தானாகவே கற்றுக்கொண்டு பயின்றதாகத் தெரிவித்துள்ளான்

10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு அமெரிக்காவில் உள்ள நிறுவனத்தில் வேலை கிடைத்த நிலையில் மாணவனின் வயது தெரியவந்ததும் வாய்ப்பு நழுவியது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர் நகரில் 10 ஆம் வகுப்பு படித்து வரும் வேதாந்த் தியோக்டே என்னும் மாணவனுக்கு அமெரிக்காவில் உள்ள நிறுவனத்திலிருந்து வருடம் 33 லட்சம் சம்பளத்துடன் வேலை கிடைத்துள்ளது. ஆனால் மாணவனின் வயது தெரிந்தவுடன் வேலை நழுவியது.

    15 வயதாகும் வேதாந்த் தியோக்டே அவனின் அம்மாவின் மடிக்கணினியில் சமூக வலைத்தளத்தைப் பார்த்துக்கொண்டு இருந்தபோது அதில் இணையதளம் உருவாக்கும் போட்டிக்கான பதிவைப் பார்த்துள்ளான். அந்த போட்டியில் கலந்துகொள்ள வேதாந்த்விற்கு ஆர்வம் ஏற்பட்டது. எனவே இரண்டு நாட்களில் அதற்காக 2,066 வரி கொண்ட வரிநிரல் சான்றுகோளை (Code) உருவாக்கி போட்டிக்காக அனுப்பியுள்ளான்.

    தற்போது அந்த போட்டிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில் வேதாந்த் வெற்றிபெற்றுள்ளதாக மின்னஞ்சல் மற்றும் அதனுடன் வேலைக்கான பணி கடிதமும் வந்துள்ளது. இதனைப் பற்றி குழப்பம் அடைத்த மாணவன் தனது ஆசிரியர்களிடம் இதனைப் பற்றிக் கூறியுள்ளான். ஆசிரியர்கள் மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டவை உண்மை என்பதை உறுதி செய்து மாணவனின் பெற்றோர்க்குத் தகவல் தெரிவித்துள்ளார்கள்.

    அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள விளம்பர நிறுவனத்தில் HRD பணிக்காக மாணவன் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் வருடம் 33 லட்சம் சம்பளம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் வருத்தமாக மாணவனுக்கு அதற்கான வயது இல்லாத நிலையில் அமெரிக்கா நிறுவனம் தற்போது வேலையை மறுத்துவிட்டது. மேலும் மாணவனின் திறமையும், கையாளும் திறனையும் கண்டு நிறுவனம் மாணவனைப் படிப்பை முடித்துவிட்டுத் தொடர்புகொள்ளுமாறு தெரிவித்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    வேதாந்த் மென்பொருள் பற்றிய அறிவை தானாகவே கற்றுக்கொண்டு பயின்றதாகத் தெரிவித்துள்ளான். இணையத்தில் வெளியாகும் காணொளிகளைப் பார்த்து அவனது அம்மாவின் பழைய மடிக்கணினியில் பயிற்சி செய்து கற்றுக்கொண்டு இந்த அளவில் மாணவன் திறமையை வளர்த்துள்ளான்.
    மாணவனின் பெற்றோர்களுக்கு இது ஆச்சிரியமாக இருக்கிறது என்றும் தங்களது மகன் மேலும் திறமையை வளர்த்துக் கொள்ள புதியதாக மடிக்கணினி வாங்கித்தருவதாகவும் கூறியுள்ளனர்.

    மாணவனின் பெற்றோர்கள் ராஜேஷ் மற்றும் அஸ்வினி பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Janvi
    First published:

    Tags: Job, School student

    அடுத்த செய்தி