• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • சக வகுப்பு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக ஒன்றாம் வகுப்பு சிறுவன் மீது வழக்கு

சக வகுப்பு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக ஒன்றாம் வகுப்பு சிறுவன் மீது வழக்கு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

அவளுடன் படிக்கும் சக மாணவன் மதிய உணவு இடைவேளையின்போது பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    ஹரியானா மாநிலத்தில் சக வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்ததாக ஒன்றாம் வகுப்பு மாணவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ஹரியானா மாநிலத்தில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவியை சகமாணவன் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலம் சிர்சா பகுதியிலுள்ள அரசுப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வரும் சிறுமி, பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததும் வயிறு வலிக்கிறது என்று அம்மாவிடம் கூறி அழுதுள்ளார்.

    அதனையடுத்து, அருகிலுள்ள மருத்துவமனைக்கு அவரது அம்மா அழைத்துச் சென்றுள்ளார். அவர்கள், மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல பரிந்துரைத்துள்ளனர். அங்கிருந்து பாதிக்கப்பட்ட ஒன்றாம் வகுப்பு சிறுமி, மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கிருந்த மருத்துவர்கள் காவல்துறைக்கு புகார் அளித்துள்ளனர்.

    இந்தச் சம்பவம் குறித்து தெரிவித்த மாவட்ட இணை காவல் கண்காணிப்பாளர், ‘பாதிக்கப்பட்ட சிறுமி அம்மாவிடமிருந்து காவல்துறைக்கு புகார் வந்தது. சிறுமியின் அம்மா, தனது மகள் ஒன்றாம் வகுப்பு படிக்கிறாள். அவளுடன் படிக்கும் சக மாணவன் மதிய உணவு இடைவேளையின்போது பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளார் என்று தெரிவித்துள்ளார். பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்தவரின் பெயர் தெரியாது என்று பாதிக்கப்பட்ட சிறுமி தெரிவித்துள்ளார்.

    ஆனால், நேரில் பார்த்தால் அவனை அடையாளம் காட்டுவேன் என்று தெரிவித்துள்ளார். தற்போது பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சையில் உள்ளார்.

    விரைவில், சிறுமியை பள்ளிக்கு அழைத்துச் சென்று குற்றத்தில் ஈடுபட்ட சிறுவன் அடையாளம் காணப்படும். ஏழு வயதுக்குட்பட்டவர்களைத் தண்டிப்பதற்கு சட்டத்தில் இடமில்லை’ என்று தெரிவித்தார்.

    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: