அமித்ஷா வாகனத்தில் கல்வீச்சு! தீவைப்பு, போலீஸ் தடியடி; கொல்கத்தாவில் பதற்றம்

கொல்கத்தா பல்கலைக்கழகத்தை கடந்து சுமார் 7 மணியளவில் கல்லூரி சாலைக்குள் பேரணி நுழைந்தபோது அமித் ஷா வந்த பிரசார வாகனத்தின் மீது சில கம்புகள் வீசப்பட்டன.

அமித்ஷா வாகனத்தில் கல்வீச்சு! தீவைப்பு, போலீஸ் தடியடி; கொல்கத்தாவில் பதற்றம்
வன்முறைச் சம்பவம்
  • News18
  • Last Updated: May 14, 2019, 10:45 PM IST
  • Share this:
மேற்குவங்கத்தில் பிரச்சாரத்துக்குச் சென்ற அமித்ஷாவின் வாகனத்தின் மீது கற்கள் வீசித் தாக்குதல் நடைபெற்றதால் இருதரப்பினருக்கும் இடையில் வன்முறை ஏற்பட்டது. அதனல், கொல்கத்தாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க இடையே கடுமையாக போட்டி நிலவிவருகிறது. ஒவ்வொரு கட்டத் தேர்தலின்போதும், மேற்குவங்கத்தில் வன்முறை நிகழ்ந்துவருகிறது. தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் பிரதமர் மோடியும் மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி பானர்ஜியும் காரசாரமாக ஒருவரையொருவர் தாக்கி பேசி வருகின்றனர்.

இந்நிலையில், இறுதிக்கட்ட பிரசாரத்துக்காக ஜாதவ்பூர் பகுதியில் பா.ஜ.க தலைவர் அமித் ஷாவின் மிக பிரமாண்டமான பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பேரணிக்கு அனுமதி அளிக்க போலீசார் மறுத்து விட்டனர். இந்த பேரணியில் பங்கேற்பதற்காக அமித் ஷா வரும் ஹெலிகாப்டர் தரையிறங்கவும் அனுமதி மறுக்கப்பட்டதால் அம்மாநில பா.ஜ.கவினர் ஆத்திரமடைந்தனர்.


இந்த பேரணி ரத்தான நிலையில் ஜாய்நகர் பகுதியில் நடைபெற்ற மற்றொரு பிரசாரக் கூட்டத்தில் நேற்று மம்தா பானர்ஜியை அமித் ஷா கடுமையாக தாக்கி பேசினார்.

அந்தக் கூட்டத்தில் பேசிய அமித்ஷா, ‘மம்தா பானர்ஜியின் மருமகன் போட்டியிடும் தொகுதிக்கு நான் போனால் அவர் தோற்பது உறுதி என்பதால் அங்கு என்னுடைய நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனது பிரசாரத்திற்கு மட்டும்தான் மம்தா பானர்ஜி தடை விதிக்க முடியும். ஆனால், பா.ஜ.கவின் வெற்றியை அவரால் தடுத்து நிறுத்திவிட முடியாது.

மத்திய அரசு கொண்டுவந்த பல திட்டங்களின் பலன்கள் இங்குள்ள மக்களை வந்து சேராத வகையில் மம்தா பானர்ஜியின் அரசு தடைக்கல்லாக நின்று தடுத்து விட்டது. அந்த திட்டங்களின் மூலம் இங்குள்ள மக்களிடையே பிரதமர் மோடி பிரபலமாகி விடக்கூடாது என்ற நோக்கத்தில் மம்தா பானர்ஜி இந்த திட்டங்களை எல்லாம் எதிர்த்து வருகிறார்.  நாளை வரை நான் கொல்கத்தாவில் இருப்பேன். முடிந்தால், துணிச்சல் இருந்தால் என்னை கைது செய்து பாருங்கள் என்று மம்தாவுக்கு நான் பகிரங்கமாக சவால் விடுகிறேன்’என அமித் ஷா பேசினார்.இந்நிலையில், கொல்கத்தாவில் இன்று மாலை நடைபெற்ற பா.ஜ.க பேரணியில் அமித் ஷா பங்கேற்றார். கொல்கத்தா பல்கலைக்கழகத்தை கடந்து சுமார் 7 மணியளவில் கல்லூரி சாலைக்குள் பேரணி நுழைந்தபோது அமித் ஷா வந்த பிரசார வாகனத்தின் மீது சில கம்புகள் வீசப்பட்டன. அமித்ஷாவின் வருகைக்கு எதிர்ப்பு மாணவர்கள் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த போராட்டத்தில் கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாணவர்கள் அமைப்புகள் ஈடுபட்டனர். அமித் ஷா வாகனத்தின் கற்கள் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும், அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோபேக் அமித்ஷா என்ற பதாகைகள் காட்டப்பட்டது. கருப்புக் கொடியும் காட்டப்பட்டது. இதனால், அங்கு பதற்றம் ஏற்பட்டது.

பேரணியில் வந்தவர்களுக்கும் வேறொரு தரப்பினருக்கும் இடையில் மோதல் வெடித்தது. சாலையோரத்தில் இருந்த கட் அவுட்டுகள் அடித்து நாசப்படுத்தப்பட்டன. போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

சில இடங்களில் தீவைப்பு சம்பவங்களும் நடைபெற்றதால் கொல்கத்தாவில் பதற்றமான சூழல் உருவானது. அதனையடுத்து, கொல்கத்தா முழுவதும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.




தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





Also see:

First published: May 14, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading