உ.பி காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் முழக்கமிட்ட பெண் உறுப்பினர் மீது தாக்குதல்

உ.பி காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் முழக்கமிட்ட பெண் மீது தாக்குதல்

உத்தர பிரதேச மாநிலத்தில், தவறான நபருக்கு சீட் வழங்கியதாக குற்றஞ்சாட்டிய காங்கிரஸ் கட்சியின் பெண் உறுப்பினரை சக உறுப்பினர்கள் கண்மூடித்தனமாக தாக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 • Share this:
  உத்தர பிரதேச மாநிலத்தின் ஐந்து சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் தியோரியா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் முகுந்த் பாஸ்கர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சிக் கூட்டத்தில் முழக்கமிட்ட தாரா யாதவ் என்ற பெண் உறுப்பினர் மீது காங்கிரஸ் கட்சியினரே வன்முறையை ஏவினர்.

  பின்னர் அங்கிருந்த மற்றவர்கள் அந்தப் பெண்ணை மீட்டனர்.  ”ஒரு பக்கம் நம் கட்சித் தலைவர்கள் ஹத்ராஸ் பெண்ணின் நீதிக்காக போராடி வரும் நிலையில், மறுபக்கம் தியோரியாவிலிருந்து ஒரு பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு உள்ளான நபருக்கு சீட் கொடுக்கப்படுவது தவறான முடிவு. அது கட்சியின் பெயரைக் கெடுக்கும்” என்று ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் தாரா தேவி தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக பிரியங்கா காந்தியின் நடவடிக்கையை எதிர்நோக்கி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

  Also read: மத்திய அரசுக்கு ₹ 2,400 கோடியை செலுத்தாமல் உள்ள விமான சேவை நிறுவனங்கள்

  காங்கிரஸ் மாவட்ட தலைவர் தர்மேந்திர சிங், துணைத் தலைவர் அஜய் சிங் உள்ளிட்ட மேலும் இருவர் மீது தாரா தேவி காவல்துறையில் அளித்த புகாரளித்துள்ளார். காங்கிரஸ் தேசிய செயலாளர் சச்சின் நாயக் மீது பூங்கொத்தை வீசியதாக அவர் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

  இந்த விவகாரம் குறித்து தேசிய பெண்கள் ஆணையம் விசாரணை நடத்தும் என அவ்வமைப்பின் தலைவர் ரேகா சர்மா தெரிவித்துள்ளார்
  Published by:Rizwan
  First published: