புதுச்சேரியில் ரவுடிகளுக்குள் மோதல்: திரைப்படங்களை மிஞ்சும் சேசிங்: இரண்டு பேர் கொலை

புதுச்சேரி ரவுடிகள்

புதுச்சேரியில் ரவுடிகளுக்குள் ஏற்பட்ட மோதலில் இரண்டு ரவுடிகள் கொலை செய்யப்பட்டனர். 

  • Share this:
புதுச்சேரி வில்லியனூர் பிள்ளையார்குப்பம் கிராமத்தை சேர்ந்த பிரபல ரவுடி அருணுக்கும் வழூதாவுரை சேர்ந்த ரவுடி முரளிக்கு முன்விரோதம் இருந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன் அருண் வழக்கமாக குடிக்கும் பிள்ளையார்குப்பம் பாலத்தின் கீழ் அருணை கொல்ல முரளியும் அவனது சகோதரனும் திட்டமிட்டு வந்தனர். இதனையறிந்து அருண் தப்பியோட அவனது பைக்கை எறித்தனர். இதனால் மோதல் கொலை வெறியாக மாறியது. அடுத்து அருண் தனது கோஷ்டிகளுடன் வழூதாவூர் சென்று முரளி மற்றும் அவனது கூட்டாளிகளை தாக்கியுள்ளான்.

இதன் உச்சமாக நேற்று முன்தினம் மதியம் 3 மணிக்கு அருண் தனியாக இருப்பதை அறிந்து கொல்ல திட்டமிட்ட முரளி தனது கூட்டாளிகள் 5 பேருடன் அருண் வழக்கமாக இருக்கும் பிள்ளையார்குப்பம் பாலத்திற்கு சென்றுள்ளார். அங்கு இருந்த அருண் மீது இரு நாட்டு வெடி குண்டுகளை வீசியுள்ளனர். இதில் லேசான காயமடைந்த அருண் ஊருக்குள் ஓட துவங்கினார். அவரை விரட்டி கொண்டு ஓடி வந்த கொலை கும்பல் ஊருக்குள் வந்தது. அங்கு ஆயுதங்களை காட்டி அக்கும்பல் மக்களை மிரட்டியுள்ளது. இந்த காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. இதன் பிறகு தான் அருண் ஆதாரவாளர்கள், ரவுடி முரளி மற்றும்   கொடாத்தூர் சந்துருவை அடித்து கொன்றுள்ளனர்.
Published by:Karthick S
First published: