டெல்லியில் சச்சின் பைலட்: அகமது படேலுடன் சந்திப்பு - ராஜஸ்தான் அரசியலில் நடப்பது என்ன?

டெல்லியில் சச்சின் பைலட்: அகமது படேலுடன் சந்திப்பு - ராஜஸ்தான் அரசியலில் நடப்பது என்ன?
அசோக் கெல்லாட் சச்சின் பைலட்
  • Share this:
ராஜஸ்தான் மாநில துணை முதல்வர் சச்சின் பைலட் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் டெல்லி சென்றுள்ளார். அவர் சோனியா காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தெரிகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெல்லாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவருகிறது. அம்மாநில துணை முதல்வராக உள்ள சச்சின் பைலட்டுக்கும் அசோக் கெல்லாட்டுக்கும் இடையில் நீண்ட காலமாக மோதல் போக்கு நீடித்துவருகிறது.

மத்திய பிரதேசத்தை போன்று ராஜஸ்தானில் ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி செய்வதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில், ராஜஸ்தானில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசியதாக பாஜகவை சேர்ந்த அசோக் சிங், பாரத் மலானி ஆகியோரை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.


இதேபோன்று மாநிலங்களவை தேர்தலில் கட்சி மாறி வாக்களிப்பதற்காக காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக சுயேச்சை எம்.எல்.ஏக்கள் மூன்று பேரிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில், சச்சின் பைலட் நேற்று இரவு, அவரது ஆதரவு காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுடன் டெல்லி சென்றார். டெல்லி சென்ற அவர் மூத்த காங்கிரஸ் தலைவர் அகமது பட்டேலைச் சந்தித்து பேசியுள்ளார். அப்போது, அசோக் கெல்லாட், தன்னை ஓரம் கட்ட முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனது எம்.எல்.ஏக்களுடன் சச்சின் பைலட் அணிசேர்வது, ராஜஸ்தான் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் சேர்ந்து ஜோதிர்ராதித்ய சிந்தியா காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்ததைப் போல ராஜஸ்தானிலும் நடைபெறலாம் என்ற சூழல் உள்ளது.தனக்கு 23 காங்கரஸ் எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாக சச்சின் பைலட் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், சச்சின் பைலட் டெல்லி சென்றுள்ள நிலையில், அவருடைய ஆதரவு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 16 பேரும், சுயேட்சை எம்.எல்.ஏக்கள் 3 பேரும் டெல்லி சென்றுள்ளனர். சச்சின் பைலட் பொறுமையைக் கடைபிடிக்கவேண்டும் என்று மூத்த காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தியதாக தெரிகிறது.
First published: July 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading