ஹோம் /நியூஸ் /இந்தியா /

நேரடி ஒளிபரப்பாகும் கோர்ட் விசாரணை.. தலைமை நீதிபதியின் கடைசி வேலைநாளுக்காக ஸ்பெஷல்!

நேரடி ஒளிபரப்பாகும் கோர்ட் விசாரணை.. தலைமை நீதிபதியின் கடைசி வேலைநாளுக்காக ஸ்பெஷல்!

தலைமை நீதிபதி லலித்

தலைமை நீதிபதி லலித்

பொதுப் பிரிவின் பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு (EWS) 10 சதவீத  இடஒதுக்கீட்டின் அரசியலமைப்பு செல்லுபடியாகும் தன்மை குறித்த வழக்கு,  ஆம்ரபாலி வீட்டுத் திட்டம் தொடர்பான வழக்குகள் இதில் முக்கியமானவை.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Delhi, India

 கடைசி வேலை நாளான இன்று அவர் தலைமையிலான பெஞ்ச் வழக்கு நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்ய உள்ளது. இந்த நேரடி ஒளிபரப்பை உச்ச நீதிமன்றத்தின் இணையதளத்தில் பார்க்கலாம் என்று உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

நீதிமன்ற வழக்கப்படி வெளியேறும் தலைமை நீதிபதி அடுத்து வரும் தலைமை நீதிபதியோடு தனது கடேசு நாள் வழக்குகளை கையாள்வர். அதே போல் அவரது இருந்து நாள் வழக்கு நடவடிக்கைகள் அனைத்தும் உச்சநீதிமன்ற வலைதளம் மூலம் மக்களுக்கு ஒளிபரப்பப்படும்.

இந்த ஆண்டு ஆகஸ்ட்  27 அன்று நாட்டின் 49 ஆவது தலைமை நீதிபதியாக பதவியேற்ற லலித் நவம்பர் 7 - இன்று தனது  பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். 74 நாட்கள் தலைமை நீதிபதியாக இருந்த அவர், கடைசி நாளான இன்று அவர் 6 வழக்குகளை கையாள இருக்கிறார்.

இதையும் படிங்க: வன்கொடுமை.. ஆபாசப்படம்.. போக்சோ வழக்குகளுக்கு நீதிமன்றம் சொன்ன முக்கிய கருத்து!

பொதுப் பிரிவின் பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு (EWS) 10 சதவீத  இடஒதுக்கீட்டின் அரசியலமைப்பு செல்லுபடியாகும் தன்மை குறித்த வழக்கு,  ஆம்ரபாலி வீட்டுத் திட்டம் தொடர்பான வழக்குகள் இதில் முக்கியமானவை.

இதற்கு முன்னதாக ஆகஸ்ட் 26 ஆம் தேதி, அப்போதைய தலைமை நீதிபதி என்.வி. ரமணாவின் கடைசி நாளன்று, தேசிய தகவல் மையத்தின் (என்ஐசி) வெப்காஸ்ட் மூலம் சுப்ரீம் கோர்ட்டின் நடவடிக்கைகள் பொது மக்களுக்காக நேரடியாக ஒளிபரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

2018 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் நடைமுறைகளை கொள்கையளவில் நேரடி ஒளிபரப்பு செய்ய அனுமதி வழங்கிய தீர்ப்புக்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தில் நேரடி ஒளிபரப்பு செய்தது அதுவே முதல் முறை.

இதையும் படிங்க:நாசிசத்தை எதிர்த்துப் போராடுவதற்கான ரஷ்யாவின் தீர்மானம்.. வாக்களித்த இந்தியா!

தற்போது, ​​உச்ச நீதிமன்றத்தில் அரசியல் சாசன அமர்வு விசாரணைகள் சுப்ரீம் கோர்ட்டின் சொந்த தளமான webcast.gov.in/scindia/ இல் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இன்றும் இதே இணையதளத்தில் தாள் லலித்தின் கடைசி நாள் வழக்குகள் ஒளிபரப்பப்பட உள்ளது.

நீதிமன்ற வழக்கப்படி, இன்று இந்திய தலைமை நீதிபதி பணியில் இருந்து ஓய்வு பெறும் யு.யு.லலித் தனது கடைசி வேலை நாளில் அடுத்த இந்திய தலைமை நீதிபதி நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் உடன் தனது நீதிபதிகள் பெஞ்சைப் பகிர்ந்து கொள்கிறார்.

மேலும், சுப்ரீம் கோர்ட்டின் தொழில்நுட்ப பிரிவு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது லலித் கடைசியாக பங்கேற்கும் வழக்குகளின் ஒளிபரப்பு நவம்பர் 7, 2022 அன்று, காலை 10:30 அதற்குப் பிறகு, சுர்பீம் நீதிமன்றத்தின் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்." என்று குறிப்பிட்டுள்ளது.

Published by:Ilakkiya GP
First published:

Tags: CJI, Supreme court