நீதிபதியின் உத்தரவை திருத்திய உச்ச நீதிமன்ற பதிவாளர்கள் இருவர் ‘டிஸ்மிஸ்’

நீதிபதி நாரிமன் அளித்த புகாரின் அடிப்படையில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இது தொடர்பாக விசாரணை நடத்தி உதவி பதிவாளர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளார்.

நீதிபதியின் உத்தரவை திருத்திய உச்ச நீதிமன்ற பதிவாளர்கள் இருவர் ‘டிஸ்மிஸ்’
உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான அனில் அம்பானி (Image:PTI)
  • News18
  • Last Updated: February 14, 2019, 12:33 PM IST
  • Share this:
அனில் அம்பானி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிபதியின் உத்தரவை திருத்தி வெளியிட்டதாக இரண்டு உதவி பதிவாளர்கள் அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.

எரிக்சன் நிறுவனம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தொழிலதிபர் அனில் அம்பானி இரண்டு நாட்கள் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

உச்சநீதிமன்றம்நீதிபதி ரோகிந்தன் எஃப் நாரிமன் அமர்வு இந்த வழக்கை விசாரித்து வரும் நிலையில், வழக்கில் நீதிபதி நாரிமன் எழுதிய உத்தரவை, விதிமுறைகளை மீறி திருத்தி உச்ச நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ததாக மானவ் சர்மா மற்றும் தபான் குமார் சக்ரபோர்தி ஆகிய இரண்டு உதவி பதிவாளர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.

திருத்தப்பட்ட தீர்ப்பு விபரம்  (Image Courtesy: The Telegraph)


நீதிபதி நாரிமன் அளித்த புகாரின் அடிப்படையில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இது தொடர்பாக விசாரணை நடத்தி உதவி பதிவாளர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளார்.Also See..

First published: February 14, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading