அயோத்தி வழக்கு குறித்த பா.ஜ.க அமைச்சரின் கூற்றை நிராகரித்த உச்ச நீதிமன்றம்!

அயோத்தி விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையில் முன்னேற்றம் ஏற்படும்போது ஒருவித அச்சம் கலந்த சூழ்நிலையும் அதிகரிக்கிறது.

அயோத்தி வழக்கு குறித்த பா.ஜ.க அமைச்சரின் கூற்றை நிராகரித்த உச்ச நீதிமன்றம்!
மாதிரிப் படம்
  • News18
  • Last Updated: September 12, 2019, 4:13 PM IST
  • Share this:
உத்தரப் பிரதேச அமைச்சரின் கூற்றை நாங்கள் நிராகரிக்கிறோம். நாங்கள் அனைவருக்கும் பொதுவானவர்கள்தான் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார்.

அயோத்தி ராமர் கோயில் தொடர்பான வழக்கு தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகிறது.

இந்தநிலையில் இரு தினங்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய உத்தரப் பிரதேச கூட்டுறவுத் துறை அமைச்சர் முகுத் பிஹாரி வர்மா, ‘அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படவேண்டும் என்பது எங்களது தீர்மானம். உச்ச நீதிமன்றம் நம்முடையது. நீதித்துறை, இந்த நாடு, ராமர் கோயில் எல்லாம் நம்முடையது’ என்று தெரிவித்தார். அவருடைய பேச்சு மிகப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.


அயோத்தி வழக்கில் இஸ்லாமியர்கள் சார்பு வழக்கறிஞர் ராஜீவ் தவான், இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றத்தில் எழுப்பினார். அயோத்தி வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் முன் பேசிய ராஜீவ் தவன், ’அயோத்தி விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையில் முன்னேற்றம் ஏற்படும்போது ஒருவித அச்சம் கலந்த சூழ்நிலையும் அதிகரிக்கிறது.

இந்த வழக்கில் இஸ்லாமியர்கள் தரப்பில் ஆஜரானதிலிருந்து என்னுடைய உதவியாளர் கூட சிலரால் மிரட்டப்படுகிறார். இந்த விவகாரம் தொடர்பாக நான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப் போவதில்லை. நான், ஏற்கெனவே, எனக்கு சாபம் விடுத்ததற்காக 88 வயதானவர் மீது வழக்குத் தொடர்ந்துள்ளேன்’ என்று தெரிவித்தார்.

அவருடைய வாதத்தைக் கேட்ட உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், ‘உத்தரப் பிரதேச அமைச்சரின் பேச்சை நாங்கள் நிராகரிக்கிறோம். இது, இந்த நாட்டில் நடைபெறக் கூடாது. இரு தரப்பினரும் சுதந்திரமாக எந்த அச்சமுமின்றி அவர்களுடைய வாதத்தை நீதிமன்றத்தின் முன் வைக்கவேண்டும்’ என்று தெரிவித்தார்.Also see:

First published: September 12, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading