ஹோம் /நியூஸ் /இந்தியா /

தசரா விழாவில் முழுமையாக எரியாத ராவணன் தலைகள்!... நகராட்சி அதிகாரிமீது பாய்ந்த நடவடிக்கை!

தசரா விழாவில் முழுமையாக எரியாத ராவணன் தலைகள்!... நகராட்சி அதிகாரிமீது பாய்ந்த நடவடிக்கை!

சத்தீஸ்கரில் தசரா கொண்டாட்டம்

சத்தீஸ்கரில் தசரா கொண்டாட்டம்

சத்தீஸ்கர் மாநிலத்தில் ராம்லீலா நிகழ்வின் போது ராவணனின் பொம்மை சரியாக தீயில் எரிததால் நகராட்சி ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Raipur, India

  நாடு முழுவதும் நவராத்திரி தசரா பண்டிகை அண்மையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவானது ஒன்பது நாள்கள் பல்வேறு சடங்குகள், பூஜைகள், வழிபாடுகள் என பல விதங்களில் கொண்டாடப்படும் விழாவாகும். நவராத்திரி பண்டிகை கொண்டாட்டம் தமிழ்நாடு, கர்நாடகா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, குஜராத் என மாநிலங்களுக்கு மாநிலம் தனித்துவமான வகையில் கொண்டாடப்படும்.

  குறிப்பாக, நவராத்திரி கடைசி நாளான விஜயதசமி அன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் ராம்லீலா நிகழ்வு கொண்டாடப்படும். அதன்படி, சத்தீஸ்கர் மாநிலம் தம்தாரி என்ற பகுதியில் தசரா பண்டிகையின் முக்கிய நிகழ்வான ராம்லீலா விழா கொண்டாடப்பட்டது. ராமன் ராவணனை வீழ்த்திய நிகழ்வை மீண்டும் நடித்து காட்டும் விதமாக 10 தலைக்கொண்ட ராவணன் உருவபொம்மை பெரிய மைதானத்தில் வைக்கப்பட்டிருந்தது. இந்த பொம்மைக்கு, தம்தரி நகராட்சி நிர்வாகத்தினர் உயரமான மேடை அமைத்து அம்பு விட்டு ராவணன் பொம்மைக்கு தீவைத்தனர்.

  ஆனால், தீவைக்கப்பட்ட ராவணன் பொம்மை முழுமையாக எரியாமல் இருந்துள்ளது. குறிப்பாக ராவணனின் 10 தலைகளில் ஒரு தலை கூட எரியவில்லையாம். இது விழாவை காணவந்தவர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து ஏற்பாடுகளை முறையாக செய்யாத குற்றத்திற்காக தம்தாரி நகராட்சி நிர்வாகம் தனது ஊழியரான ராஜேந்திர யாதவ் என்பவரை சஸ்பெண்ட் செய்துள்ளது.

  இதையும் படிங்க: பிடித்த யூடியூபரை பார்க்க 300 கிமீ தூரம் சைக்களில் சென்ற சிறுவன்.. கடைசியில் ட்விஸ்ட்

  அத்துடன் விஜய் மேஹ்ரா, லோமாஸ், கமலேஷ் தாகூர், கம்தா நாகேந்திரா ஆகிய நான்கு ஊழியர்களுக்கு நகராட்சி நிர்வாகம் விளக்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Chattisgarh, Dusshera celebrations