அசாம் சகோதர, சகோதரிகள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை - பிரதமர் மோடி

அசாம் சகோதர, சகோதரிகள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை - பிரதமர் மோடி
பிரதமர் மோடி
  • News18
  • Last Updated: December 12, 2019, 11:58 AM IST
  • Share this:
அசாம் மாநிலத்தில் கடும் வன்முறை மற்றும் பதற்றநிலை நீடிக்கும் நிலையில், குடியுரிமை மசோதாவால் அசாம் சகோதர, சகோதரிகள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

குடியுரிமை சட்டத்திருத்த மசோசா நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ள நிலையில், அசாம் மாநிலத்தில் சில நாட்களாக பதற்ற நிலை நீடித்து வருகிறது. பல மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.


இந்த நிலையில், பிரதமர் மோடி இன்று காலை வெளியிட்ட ட்விட்டர் பதிவில், குடியுரிமை மசோதா நிறைவேற்றப்பட்டது குறித்து அசாமில் உள்ள சகோதர,சகோதரிகள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என உறுதி அளிக்கிறேன். உங்களின் உரிமைகள், தனிப்பட்ட அடையாளம், அழகிய கலாச்சாரம் ஆகியவற்றை யாரும் பறிக்க முடியாது . அது உங்களின் வளம் மற்றும் வளர்ச்சியை தொடர செய்யும்.

பிரிவு 6 அடிப்படையில் அசாம் மக்களின் அரசியல், மொழியியல், கலாச்சார மற்றும் நில உரிமைகள் அரசியலமைப்பின் அடிப்படையில் பாதுகாக்க நானும் மத்திய அரசும் உறுதி பூண்டுள்ளோம். இவ்வாறு பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
First published: December 12, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading