ஹோம் /நியூஸ் /இந்தியா /

குடியுரிமை திருத்தச் சட்டம் கேராளவில் அமல்படுத்தப்படாது - முதல்வர் பினராயி விஜயன் உறுதி

குடியுரிமை திருத்தச் சட்டம் கேராளவில் அமல்படுத்தப்படாது - முதல்வர் பினராயி விஜயன் உறுதி

பினராயி விஜயன்

பினராயி விஜயன்

குடியுரிமைத் திருத்தச் சட்டம் கேரளாவில் அமல்படுத்தப்படாது என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகி இந்தியாவில் குடியேறிய இஸ்லாமியர் அல்லாதோருக்கு குடியுரிமை வழங்க வகை செய்யும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்தது. மத்திய அரசு கொண்டுவந்த திருத்தச் சட்டக்கு நாடு முழுவதும் மிகப் பெரிய எதிர்ப்பு கிளம்பியது. அந்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில் கொரோனா பாதிப்பு இந்தியாவில் பரவத்தொடங்கியது. மத்திய அரசு, குடியுரிமை திருத்தச் சட்டத்தை செயல்படுத்தும் பணியை நிறுத்திவைத்திருந்தது.

இந்தநிலையில், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘கொரோனா தடுப்பூசி முகாம் முடிந்தபிறகு குடியுரிமை திருத்தச் சட்டப் பணிகள் தொடங்கும்’ என்று தெரிவித்தார். அவருடைய பேச்சு மீண்டும் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தவிவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயன், ‘கொரோனா தடுப்பூசி பணிகள் முடிந்த பிறகு குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும் என்று அமித்ஷா கூறியுள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டம் கேரளாவில் அமல்படுத்தப்படாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். சிஏஏ சட்டமாக நிறைவேற்றப்பட்ட பிறகு கேரளாவில் எப்படி அமல்படுத்தாமல் இருக்க முடியும் என்று சிலர் கேட்கின்றனர். நான் சொல்வது என்னவென்றால், கேரளாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படாது’ என்று தெரிவித்தார்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: CAA Protest, Kerala CM Pinarayi Vijayan