முகப்பு /செய்தி /இந்தியா / 17 வயது நிரம்பினாலே இனி வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் - இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு

17 வயது நிரம்பினாலே இனி வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் - இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு

17 வயது நிரம்பியர்கள் இனி வாக்காளர் அடையள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்

17 வயது நிரம்பியர்கள் இனி வாக்காளர் அடையள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகளையும் தேர்தல் ஆணையம் முன்னெடுத்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

நாட்டில் இனி 17 வயது நிரம்பிய இளைஞர்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தியாவில் 18 வயது அடைந்தவர்களுக்கே வாக்குரிமை உள்ளது. இந்நிலையில், 17 வயது நிரம்பியவர்கள் 18 வயது வரும் வரை காத்திருக்கும் அவசியம் இல்லாமல், ஒரு வருடம் முன்னதாகவே அட்வான்ஸ்சாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

எனவே, அனைத்து மாநில தலைமை தேர்தல் அலுவலர்கள், அவர்களின் கீழ் இயங்கும் அதிகாரிகள் இளைஞர்கள் முன்கூட்டியே விண்ணப்பிக்கத் தேவையான தொழில்நுட்ப வசதிகள் ஏற்பாடு செய்து தருமாறு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் உத்தரவிட்டுள்ளார்.

இளைஞர்களின் விண்ணப்பங்களின் சரிபார்ப்பு பணிகளை விரைந்து முடித்து தகுதி வாய்ந்தோர் பட்டியலில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. புதிதாக திருத்தப்பட்ட 2023ஆம் ஆண்டுக்கான வாக்காளர் வரைவு பட்டியல் விரைவில் வெளியிடப்படும். 2023ஆம் ஆண்டில் ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபர் 1 ஆகிய காலகட்டங்களில் 18 வயது நிரம்ப உள்ளவர்கள் முறையே ஓராண்டுக்கு முன்னதாகவே தங்கள் விண்ணப்பங்களை 17 வயதில் சமர்ப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: விஸ்வரூபம் எடுக்கும் ஆசிரியர் நியமன ஊழல்..அமலாக்கத்துறை சோதனையில் ரூ. 50 கோடி பணம், 5 கிலோ தங்கம் பறிமுதல்

இந்நிலையில், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகளையும் தேர்தல் ஆணையம் முன்னெடுத்துள்ளது. முதல் கட்டமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த இணைப்பு பணி தொடங்கியுள்ளது. 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் புள்ளி விவரப்படி நாட்டில் சுமார் 90 கோடி பதிவு செய்யப்பட்ட வாக்களர்கள் உள்ளனர். அதிக இளைஞர்களின் எண்ணிக்கை கொண்ட நாடாக இந்தியா திகழ்வதால் 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இந்த எண்ணிக்கை மேலும் கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Election commission of India, First Time Voter, Voters ID, Voters list