கடலை, பிஸ்கட், மட்டன்.. எல்லாவற்றிலும் சுருட்டப்பட்ட ’பொருள்’...! ஏர்போர்ட்டில் அதிகாரிகளுக்கு ஷாக் கொடுத்த கடத்தல் ஆசாமி

கடலை, பிஸ்கட், மட்டன்.. எல்லாவற்றிலும் சுருட்டப்பட்ட ’பொருள்’...! ஏர்போர்ட்டில் அதிகாரிகளுக்கு ஷாக் கொடுத்த கடத்தல் ஆசாமி
  • News18
  • Last Updated: February 12, 2020, 5:38 PM IST
  • Share this:
டெல்லி விமான நிலையத்தில் கடலை, பிஸ்கட், வேகவைத்த ஆட்டிறைச்சி ஆகியவற்றில் வைத்து கடத்திய 45 லட்ச ரூபாய் வெளிநாட்டு கரன்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமானநிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும் விமான நிலையங்களில் ஒன்று.

இந்த விமான நிலையத்திற்கு புதன்கிழமை துபாயிலிருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானம் ஒன்று வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பரிசோதித்தனர்.


அப்போது, முரத் அலி என்ற இளைஞரின் நடவடிக்கைகள் சந்தேகத்திற்கு இடமாக இருந்தது. இதை அடுத்து அவரை அயன் சினிமா பாணியில் தனியாக அழைத்து சுங்கத்துறை அதிகாரிகள் சோதித்தனர்.

ஆனால், அவரிடம் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் அவர் கொண்டுவந்த பொருட்களை சோதித்தபோது அதில் வெறும் நிலக்கடலை, சமைத்த ஆட்டுக்கறி, பிஸ்கட் மட்டுமே இருந்தது.

ஆனாலும், சுங்கத்துறை அதிகாரிகளுக்கு முரத் அலி மீது சந்தேகம் இருந்தது. இதை அடுத்து அவர் கொண்டு வந்த உணவுப்பொருட்களை சோதித்தபோது அதிர்ச்சி அடைந்தனர்.முழு கடலையை உடைத்தால் அதற்குள் கடலை பருப்புக்கு பதில் வெளிநாட்டு கரன்சி இருந்தது. பிஸ்கட் பாக்கெட்டை பிரித்தால் அதற்குள் முன்னும் பின்னும் முழு பிஸ்கட்டை வைத்தும், அதற்கு கீழ் துளையிட்டு வெளிநாட்டு கரன்சி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

சமைத்த ஆட்டுக்கறியை பிரித்துப்பார்த்தால் அதற்குள்ளும் பணம் இருந்ததை கண்டு அதிர்ந்து போயினர்.

இதை அடுத்து முரத் அலி கடத்தி வந்த, 2 லட்சத்து 22 ஆயிரத்து 500 சவுதி ரியால், ஆயிரத்து 500 கத்தார் ரியால், ஆயிரத்து 200 குவைத் தினார், 300 ஓமன் ரியால், ஆயிரத்து 800 யூரோ என 45 லட்சம் ரூபாய் மதிப்பிலான கரன்சி பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், வெளிநாட்டு கரன்சியை கடத்தி வந்த முரத் அலியை டெல்லி போலீசிடம் சுங்கத்துறையினர் ஒப்படைத்து விசாரித்து வருகின்றனர்.

கடலைக்குள் கரன்சியை வைத்து நூதனமாக கடத்திய செயலைக்கண்டு டெல்லி விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
First published: February 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading