ஒளிப்பதிவு திருத்த மசோதா.. திரைத்துறையினர் கடும் எதிர்ப்பு -நாடாளுமன்ற நிலைக்குழு இன்று டெல்லியில் ஆய்வு

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்

புதிய மசோதா குறித்து எழுந்துள்ள அச்சங்கள் குறித்து தகவல் ஒளிபரப்புத் துறை அதிகாரிகள் விளக்கம் அளிக்க அழைக்கப்பட்டுள்ளனர்.

  • Share this:
    நாடுமுழுதும் திரைத்துரையினர் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள ஒளிப்பதிவு திருத்த மசோதா குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு இன்று டெல்லியில் ஆய்வு செய்கிறது.

    தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்ட திரைப்படங்களை மீண்டும் ஆய்வு செய்து தணிக்கை சான்றிதழை ரத்து செய்யும் வகையில் புதிய சட்ட திருத்தம் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான மசோதாவை மத்தியஅரசு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் ஒரு திரைப்படத்தை மத்திய அரசு எப்போது வேண்டுமானாலும் தடை செய்ய முடியும்.இந்த மசோதாவுக்கு திரைதுறையினர் கடும் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் புதிய மசோதா குறித்து தகவல் தொழில்நுட்பத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு அதன் தலைவரும், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான சசிதரூர் தலைமையில் கூடி இன்று ஆலோசனை நடத்த உள்ளது.
    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    புதிய மசோதா குறித்து எழுந்துள்ள அச்சங்கள் குறித்து தகவல் ஒளிபரப்புத் துறை அதிகாரிகள் விளக்கம் அளிக்க அழைக்கப்பட்டுள்ளனர். புதிய மசோதா அமலுக்கு வந்தால் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் செயல்பாட்டில் மாற்றங்கள் ஏற்படுமா என்பது குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Ramprasath H
    First published: