சீட் தராததால் காங்கிரசில் இணைந்த முன்னாள் ‘சவுகிதார்’

வடமேற்கு தொகுதியின் தற்போதைய எம்.பியான உதித் ராஜ்-க்கு சீட் வழங்கப்படவில்லை. அவருக்கு பதிலாக ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

சீட் தராததால் காங்கிரசில் இணைந்த முன்னாள் ‘சவுகிதார்’
காங்கிரசில் இணைந்த உதித் ராஜ்
  • News18
  • Last Updated: April 24, 2019, 11:49 AM IST
  • Share this:
மக்களவை தேர்தலில் போட்டியிட சீட் தராததால், பாஜக எம்.பி உதித் ராஜ், காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தி முன்னிலையில் இன்று இணைந்துள்ளார்.

மக்களவை தேர்தலின் 3 கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்துள்ள நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளுக்கு மே 12-ம் தேதி வாக்குப்பதிவு நடக்க உள்ளது.

பாஜகவும் சமீபத்தில் டெல்லிக்கான வேட்பாளர்களை அறிவித்தது. கிரிக்கெட் வீரர் கம்பீர் கிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார்.


வடமேற்கு தொகுதியின் தற்போதைய எம்.பியான உதித் ராஜ்-க்கு சீட் வழங்கப்படவில்லை. அவருக்கு பதிலாக ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.


சீட் கிடைக்காததால், நேற்று உதித் ராஜ் பாஜகவில் இருந்து விலகப்போவதாக அறிவித்தார். மேலும், பாஜகவினரின் அடைமொழியான சவுகிதாரையும் தனது பெயரின் முன்னாள் இருந்து அகற்றினார்.


பின்னர், என்ன நினைத்தாரோ தெரியவில்லை. மீண்டும் சவுகிதாராக மாறினார். இந்நிலையில், டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்து உதித் ராஜ் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

பார்க்க... உண்மையான சவுகிதார்களின் நிலை என்ன?

First published: April 24, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்