ஹெலிகாப்டர் விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய கேரள தொழிலதிபர்!

ஹெலிகாப்டர் விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய கேரள தொழிலதிபர்!

தொழிலதிபர் யூசுப் அலி

கேரளாவில் பிரபல தொழிலதிபர் யூசுப் அலி பயணித்த ஹெலிகாப்டர் தொழில்நுட்ப கோளாரால் விபத்தில் சிக்கியது.

  • Share this:
கேரளாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் யூசுப் அலி, இவரின் LuLu குழுமம் ஐக்கிய அரபு அமீரகத்தை தளமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. பெரும் கோடீஸ்வரரான யூசுப் அலி பயணம் செய்த ஹெலிகாப்டர் இன்று எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கியது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உறவினரை நேரில் சந்திப்பதற்காக LuLu குழும தலைவர் யூசுப் அலி, அவருடைய மனைவி மேலும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த மூவர் இன்று காலை 9 மணி அளவில் அவருடைய கொச்சு கதவந்த்ரா இல்லத்திலிருந்து அவருக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் புறப்பட்டார்.

கொச்சியின்பனங்காடு எனும் பகுதியில் உள்ள கேரள மீன்வளப் பல்கலைக்கழகத்தில் உள்ள ஹெலிபேடில் தரையிறங்குவதாக திட்டமிடப்பட்டிருந்த நிலையில் சிறிய அளவில் மழை பெய்து கொண்டிருந்தது, திடீரென ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஓரளவு சமாளித்த விமானி ஹெலிபேடுக்கு பதிலாக அங்கிருந்து 200 மீட்டர் தொலைவில் இருந்த மீன்வளப் பல்கலைக்கழகத்தில் உள்ள புதர் மண்டிக்கிடந்த காலி இடத்தில் ஹெலிகாப்டரை சாதுர்யமாக தரையிறக்கி உள்ளார்.

விமானி சாதுர்யமாக செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனிடையே ஹெலிகாப்டரில் இருந்த யூசுப் அலி உட்பட அனைவரும் கீழே இறங்கி மார்பளவு தண்ணீரில் நடந்து, அருகில் இருந்தவர்களின் உதவியுடன் அந்த இடத்தில் இருந்து வெளியே வந்தனர். பின்னர் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

தொழிலதிபர் யூசுப் அலி


விபத்து தொடர்பாக பனங்காடு காவல்நிலைய அதிகாரிகள் தெரிவிக்கையில், அது பாதுகாப்பான ஒரு தரையிறக்கம் தான், அருகில் பிஸியான தேசிய நெடுஞ்சாலை உள்ளது, மின்சார லைன்களும் செல்கின்றன. இருப்பினும் பாதுகாப்பான இடத்தில் ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டுள்ளது என்றனர்.

யார் இந்த யூசுப் அலி?

யூசுப் அலி என அழைக்கப்படும் யூசுப் அலி முசலியம் வெட்டிடில் அப்துல் காதர் ஐக்கிய அரபு நாடுகளை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் LuLu குழுமத்தின் தலைவர் ஆவார். கேரளாவின் சிறிய கிராமத்தைச் சேர்ந்த யூசுப் அலி 1973ம் ஆண்டு அவருடைய மாமா ஒருவரின் சின்னஞ்சிறிய தொழிலை கவனிப்பதற்காக ஐக்கிய அரபு அமீரகம் சென்றார்.

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கொரோனா பாதிப்பு


தற்போது LuLu எனப்படும் மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்யத்தை நிறுவியுள்ளார் யூசுப் அலி, இவருடைய சொத்து மதிப்பு ஃபோர்ப் இதழ் தகவலின்படி 4.8 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். அதாவது இந்திய மதிப்பில் 35,000 கோடி ரூபாய்.



LuLu நிறுவனத்திற்கு அரபு நாடுகளிலும் பிற நாடுகளிலும் சுமார் 200 சங்கிலித் தொடர் ஹைப்பர் மார்க்கெட்கள் மற்றும் ஷாப்பிங் மால்கள் உள்ளன. ஐக்கிய அரபு மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் LuLu நிறுவனத்தின் 20% பங்குகளை வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

கொரோனா காலத்தில் கேரளாவிலும் பிற பகுதிகளிலும் பல உதவிகளை யூசுப் அலி வழங்கியிருக்கிறார். கேரளாவில் கொரோனா நோயாளிகளுக்காக 1400 படுக்கை வசதி கொண்ட மருத்துவ மையம் ஒன்றை கட்டமைத்துள்ளார். சுமார் 6.8 மில்லியன் டாலர்கள் அளவுக்கு கொரோனா நடவடிக்கைகளுக்காக உதவியுள்ளார் யூசுப் அலி.

திரிபுரா பழங்குடியினர் சபை தேர்தல் : ஆளும் பாஜக கூட்டணிக்கு அதிர்ச்சி!

Published by:Arun
First published: