• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • அதிக பால் சுரப்பதற்காக ஆடு, மாடுகளுக்கு சாக்லேட்: மத்தியபிரதேச பல்கலைக்கழகம் கண்டுபிடிப்பு!

அதிக பால் சுரப்பதற்காக ஆடு, மாடுகளுக்கு சாக்லேட்: மத்தியபிரதேச பல்கலைக்கழகம் கண்டுபிடிப்பு!

கால்நடை சாக்லேட்

கால்நடை சாக்லேட்

வைட்டமின், புரோட்டீன் அதிகமாக உள்ளதால் இந்த சாக்லேட்டை கால்நடைகள் உண்ணும்போது அவற்றின் பால் உற்பத்தி அதிகரிக்கும். கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும். ஒவ்வொரு சாக்லேட்டின் எடையும் 500 கிராம் இருக்கும். சாக்லேட் ஒன்றின் விலை 25 ரூபாய் என்று கூறப்படுகிறது.

  • Share this:
    ஆடு, மாடுகளுக்கான சாக்லேட்டை மத்திய பிரதேச மாநிலம், ஜபல்பூரில் உள்ள  பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.

    மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூரில் நானாஜி தேஷ்முக் கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இங்குள்ள ஆராய்ச்சியாளர்கள் ஆடு, மாடு போன்ற கால்நடைகளுக்கு  சாக்லேட் வடிவிலான உணவை கண்டுபிடித்துள்ளனர்.  இதில் பல்வேறு வைட்டமின்கள், தாதுபொருட்கள் அடங்கியுள்ளதால் கால்நடைகளின் இனப்பெருக்கம் மற்றும் பால் சுரப்பு அதிகரிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக நானாஜி தேஷ்முக் கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தின்  துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.பி.திவாரி கூறுகையில், 2 மாத ஆராய்ச்சிக்கு பின்னர்  வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்த இந்த  சாக்லேட், கால்நடைகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. தீவனம்  கிடைக்காதபோது, இதை மாற்றுத்தீவனமாக கால்நடைகளுக்கு வழங்கலாம் என்று தெரிவித்தார்.

    மாநில  கால்நடை பராமரிப்புத்துறையின் உதவியுடன் இந்த சாக்லேட்டுகள் மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு விரைவில் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.  சொந்தமாக சாக்லேட் தயாரிக்க ஆலைகளை அமைக்க விரும்பும் கால்நடை அறிவியல் பட்டதாரிகளுக்கு இந்த சாக்லேட் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை கற்றுக்கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    வைட்டமின், புரோட்டீன் அதிகமாக உள்ளதால் இந்த சாக்லேட்டை கால்நடைகள் உண்ணும்போது அவற்றின் பால் உற்பத்தி அதிகரிக்கும். கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும். ஒவ்வொரு சாக்லேட்டின் எடையும் 500 கிராம் இருக்கும். இதனை கால்நடைகளுக்கு அப்படியேவும் அல்லது பிற தீவனத்துடன் சேர்த்தும் வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


    இந்த சாக்லேட்டை தயாரிப்பதற்கான  மரக்கட்டையினால்  உருவாக்கப்பட்ட அச்சையும் பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது. இதுவரை 500 அச்சுகள் உருவாக்கப்பட்டுள்ளன.  கால்நடை சாக்லேட் ஒன்றின் விலை 25 ரூபாய் என்று கூறப்படுகிறது. விரைவில் இந்த சாக்லேட் சந்தைக்கு விற்பனைக்கு வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


    மேலும் படிக்க: மிகப்பெரிய ராணுவ சக்தியாக இந்தியாவை உருவாக்குவதே இலக்கு: பிரதமர் நரேந்திர மோடி!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: