சீன ஹேக்கர்கள் சதியை முறியடித்து விட்டோம்: மத்திய மின்சாரத் துறை அமைச்சகம் திட்டவட்டம்

ஹேக்கர்கள்

சீனாவின் ‘ரெட் எக்கோ’ என்ற சீன அரசு ஆதரவு ஹேக்கர்கள் இந்த சதி வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று நியுயார்க்டைம்ஸ் நாளிதழ் கூறியது. மேலும் ‘ShadowPad' என்ற மால்வேர் மூலம் இந்தத் தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

 • Share this:
  சீன அரசு ஆதரவுடன் செயல்படும் சீன கணினி ஹேக்கர்கள் இந்தியாவின் பல நகரங்களில் உள்ள பல பெரிய மின் நிலையங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாகவும் ஆனால் சைபர் ஏஜென்சிகள் முன் கூட்டியே எச்சரிக்கை விடுத்ததால் தாக்குதல் முறியடிக்கப்பட்டதாகவும் மத்திய மின்சாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.

  கடந்த ஆண்டு மும்பையில் வரலாறு காணாத அளவுக்கு மின் தடை ஏற்பட்டது, சீன ஹேக்கர்களின் கைவரிசை காரணமாகத் தான் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

  இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே கடந்த ஆண்டு லடாக்கின் கல்வான் பகுதியில் மோதல் ஏற்படுவதற்கு முன்னதாகவே சீன ஹேக்கர்கள் இந்தியா மீது சைபர் யுத்தத்தில் ஈடுபட்டது தற்போது தெரியவந்துள்ளது.

  இணைய பயன்பாட்டை கண்காணித்து வரும் Recorded Future என்ற அமெரிக்க நிறுவனம் நடத்திய சமீபத்தில் ஆய்வில், மின்பகிர்மான கழகம், துறைமுகங்கள் உள்ளிட்ட 12 முக்கியமான இந்திய அரசு நிறுவனங்களின் மீது சீன ஹேக்கர்கள் சைபர் தாக்குதலை கடந்த ஆண்டு நடத்தியதாக தெரியவந்துள்ளது. இது பிரபல நியூயார்க் டைம்ஸ் இதழில் செய்திக்கட்டுரையாகவும் வெளிவந்துள்ளது.

  ஆனால் இந்த ரிப்போர்ட் குறித்து மத்திய அரசு ஆம் என்றோ இல்லை என்றோ கூறவில்லை. ஆனால் இதனால் எந்த ஒரு தரவு திருட்டும் நடக்கவில்லை என்று மட்டும் கூறியது.

  சீனாவின் ‘ரெட் எக்கோ’ என்ற சீன அரசு ஆதரவு ஹேக்கர்கள் இந்த சதி வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று நியுயார்க்டைம்ஸ் நாளிதழ் கூறியது. மேலும் ‘ShadowPad' என்ற மால்வேர் மூலம் இந்தத் தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

  இந்தியா முழுவதும் மின்சார விநியோகத்திற்கு பொறுப்பான NTPC நிறுவனத்தின் இணைய நெட்வொர்க்கினுள் சீன ஹேக்கர்களால் மால்வேர் செலுத்தப்பட்டிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நிறுவனங்களின் மீதான சீன ஹேக்கர்களின் தொடர் கைவரிசை, கல்வான் மோதல் நடைபெற்ற 2020 ம் ஆண்டு மே மாதத்திற்கு பல நாட்களுக்கு முன்னதாகவே தொடங்கிவிட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

  கடந்த ஆண்டு அக்டோபரில் மும்பை மாநகர் மற்றும் சுற்றுப்புறங்களில் கடும் மின் தடை ஏற்பட்டது. சுமார் 10 முதல் 12 மணி நேரங்கள் வரை தொடர்ந்த இந்த மின் தடை காரணமாக மின்சார ரயில் சேவை, மும்பை பங்குச்சந்தை, மருத்துவமனைகளின் இயக்கம் போன்றவை தடைபட்டது. இதுவரை வரலாற்றில் இப்படி ஒரு மிந்தடை ஏற்பட்டதில்லை என கூறப்பட்டது.

  இந்நிலையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் ஹேக்கர்கள் தாக்குதல் இலக்குகள் முறியடிக்கப்பட்டுள்ளதாக மத்திய மின்சாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  Published by:Muthukumar
  First published: