Home /News /national /

அருணாச்சல பிரதேச மாநிலத்திற்குட்பட்ட 15 இடங்களை பெயர் மாற்றம் செய்துள்ள சீன - இந்தியா கண்டனம்!

அருணாச்சல பிரதேச மாநிலத்திற்குட்பட்ட 15 இடங்களை பெயர் மாற்றம் செய்துள்ள சீன - இந்தியா கண்டனம்!

கோப்புப் படம்

கோப்புப் படம்

சீன அரசின் புதிய எல்லைப் பாதுகாப்பு சட்டம் நாளை முதல் அமலுக்கு வரவுள்ளதை முன்னிட்டு இந்த பெயர்மாற்ற பட்டியலை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது.

  • Last Updated :
    அருணாச்சல பிரதேச மாநிலத்திற்குட்பட்ட 15 இடங்களை பெயர் மாற்றம் செய்துள்ள சீன அரசுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சல பிரதேசத்தை சீனா நீண்ட காலமாக சொந்தம் கொண்டாடி வருகிறது. அதன்படி இந்திய பகுதிக்குட்பட்ட இடங்களை சீன மொழியில் பெயர்மாற்றம் செய்து வரைபடத்தில் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளது.

    இதேபோன்று 2017ஆம் ஆண்டு அருணாச்சலபிரசேத்தில் உள்ள 6 இடங்களை சீன அரசு பெயர்மாற்றம் செய்தது. இதற்கு இந்திய தரப்பில் கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் தற்போது இந்திய எல்லைக்குட்பட்ட எட்டு குடியிருப்பு பகுதிகள், நான்கு மலைகள், இரண்டு ஆறுகள் மற்றும் ஒரு மலைப்பாதையின் பெயர்களை சீன மொழியில் மாற்றியுள்ளது.

    Also read... இந்தியாவில் 8 மாவட்டங்களில் 10%க்கும் அதிகமாக தொற்று - மத்திய சுகாதாரத்துறை!

    சீன அரசின் புதிய எல்லைப் பாதுகாப்பு சட்டம் நாளை முதல் அமலுக்கு வரவுள்ளதை முன்னிட்டு இந்த பெயர்மாற்ற பட்டியலை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது.

    Also read... அதிகரிக்கும் கொரோனா - மும்பையில் 144 தடை உத்தரவு அமல்!

    இது குறித்து விளக்கம் அளித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அருணாச்சல பிரதேசம் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும் அதற்கு யாரும் உரிமை கோர முடியாது எனவும் தெரிவித்துள்ளது.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Arunachal Pradesh, China, India

    அடுத்த செய்தி