சீனா தொழில்நுட்ப பாய்ச்சலில் உள்ளது; கோவில், மசூதி என்று பேசி நாம் நேரத்தை வீணடிக்கிறோம் - கடற்படை முன்னாள் தளபதி

news18
Updated: August 12, 2019, 2:25 PM IST
சீனா தொழில்நுட்ப பாய்ச்சலில் உள்ளது; கோவில், மசூதி என்று பேசி நாம் நேரத்தை வீணடிக்கிறோம் - கடற்படை முன்னாள் தளபதி
அருண் பிரகாஷ்
news18
Updated: August 12, 2019, 2:25 PM IST
செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ் என்று சீனா தொழில்நுட்ப பாய்ச்சலில் உள்ளது; நாம் கோவில், மசூதி என்று பேசி நேரத்தை வீணடிக்கிறோம் என்று கடற்படையின் முன்னாள் தளபதி அருண் பிரகாஷ் கூறியுள்ளார்.

டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கடற்படையின் முன்னாள் தளபதி அருண் பிரகாஷ், 370 சட்டப்பிரிவை நீக்கியது ஜம்மு காஷ்மீர் பிராந்தியத்தில் அமைதியையும் வளர்ச்சியும் கொண்டுவரும் என்று நம்புவதாக கூறியுள்ளார்.

“செய்ற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ் என்று சீனா தொழில்நுட்ப பாய்ச்சலில் உள்ளது. ஆனால், நாம் கோவில், மசூதி என்று பேசிக்கொண்டிருந்தால் அது நிச்சயமாக நேரத்தை வீணாக்குவதே” என்று அருண் பேசினார்.

கடந்த 2004 முதல் 2006 வரை கடற்படையின் தளபதியாக அருண் பிரகாஷ் பணியாற்றியுள்ளார்.

First published: August 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...